நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள் நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர்.
"மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம்.
ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும்
"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்'
முதலில் எந்த ஒரு விடயத்தையும் பற்றி சிந்திக்கும் போது சிந்தனைக்கான கருத்து எதன் அடிப்படையில் பெறப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். அறிதற்குறிய பொருளை அக்துள்ள படி அறியச்செய்ய உதவுவது அளவைகள். அளவைகள் கீழ் காணும் பத்து வகைப்படும் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சாத்தனார், சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் அளவை வாதிகளின் அளவை மற்றும் அனைத்து சமய தத்துவங்களையும் விரிவாக எடுத்துக்கூறி உள்ளார்.
1.காட்சி அளவை - ஐந்து வகைப்படும். மனிதனின் 5 பொறிகளின் மூலம் கிடைப்பது.
2. கருத்தளவை - அனுமானாத்தால் கிடைப்பது. (பொது, எச்சம், முதல் என்று மூன்று வகைப்படும்)
3. உவமை அளவை - ஒப்புகூற்று
4. ஆகம அளவை -ஆகமம் போன்ற பழை நூல்களை ஏற்று கொண்டு அவற்றில் இருப்பது
5. அருந்தாபத்தி அளவை - கிட்டதிட்ட ஆகுபெயர் போன்றது
6. இயல்பளவை -
7. ஐதீக அளவை - செவி வழி செய்திகளை நம்புவது
8.அபாவ அளவை - இல்லாமையை உணர்தல்
9.மீட்சி அளவை- எதிர்மறை கூற்று ஏற்றல்
10. உள்ள நெறி அளவை -
இந்த அளவைகள் மூலம் செய்திகளை பெறும் போது 8 வகை குற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவை
1.கட்டுணர்வு - பொருள், பெயர், இனம், குணம் , செயல் என்ற ஐந்தும் இன்றி அறியப்படல்.
2.திரியக்கோடல் - ஒன்றை பிரிதொன்றாக மயங்கி எண்ணுதல்
3.ஐயம் - உறுதி படுத்தாத மயக்க நிலை
4.தேராது தெளிதல்
5. கண்டுணராமை
6.இல்வழக்கு
7.உணர்ந்ததை உணர்தல்
8. நினைப்பு - முக்கியமானது . பெற்றோர், குரு போன்றோர் கூறியதை அராய்ச்சி இன்றி நம்புதல்.
தமிழர்களின் தத்துவ அறிவின் எடுத்துக்காட்டாய் இருப்பது மணிமேகலை. நாம் அந்த இலக்கியத்தை படிக்காமல் இருப்பதால் தான் இன்னும் இந்தியாவில் இருந்த 10க்கும் மேற்பட்ட வைதீக/அவைதீக/நாத்திக தத்துவம்/ சமயங்களின் கருத்துகளை அறிந்து, அதனிடமிருந்து பயன் பெறாமல், மதங்கள் என்னும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறோம்
No comments:
Post a Comment