Tuesday, May 26, 2020

Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும்

பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையபட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே.
The future is predetermined and therefore there can not be any thing as free will.
அதாவது ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட்ட செய்கையினால் நிகழ்வுகள் மாற்றம் பெறுவது இல்லை.

Video Link Below




இனி ஆசிவக கொள்கைக்கு வருவோம். ஆசீவகம் என்னும் தத்துவம்/மதம் தமிழகத்தில் முதல் 10 நூற்றாண்டுகளில் மக்களால் பின்பற்றபட்டது.ஆசீவகம் என்பது வேத நெறியிலிருந்து மாறுபட்டு கர்மக்கொள்கையை ஏற்காத மதம். இதன் அடிப்படை கொள்கை "நியதிக் கொள்கை " ஆகும்.. அதன் படி
"இவ்வுலகத்தின் எந்த ஒன்றும் மரணிப்பதில்லை. விதியும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. எனவே இங்கு வாய்ப்புக்கள் என்று எதுவும் இல்லை. ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடையலாம்".

நாம் அடிக்கடி கூறும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!" என்ற பாடல் ஆசீவக தத்துவத்தை விளக்கும் பாடலே. அந்த் பாடலின் பிற்பகுதியை காணுங்கள்
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

அதன் பொருள்
"மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை."

ஆற்று நீரில் அடித்து செல்லும் தெப்பம் போன்றது நமது வாழ்க்கை. தெப்பத்தின் பாதை ஆற்று நீர் கையில் உள்ளது போல், நமது வாழ்க்கை பாதை முன்பே தீர்மானிக்கப்பட்ட நியதி அடிப்படையில் ஆனது. எனவே அருஞ்செயல் செய்தார் என்று பெரியோர் என்று வியத்தலும் தேவை இல்லை. திறமை இல்லாதவர் , சிறியோர் என்று இகழ்தலும் தேவை இல்லை என்று கூறுகின்றது இப்பாட்டு.

மீண்டும் ஒரு முறை பி.பி.சியின் காணொளியை பாருங்கள்!. ஆசீவகம் மற்றும் நியதிக்கொள்கை பற்றி படியுங்கள்!! கணியன் பூங்குன்றனாரின் பாடலை படியுங்கள். இவற்றுக்கிடையே உள்ள ஒப்புமையை காணுங்கள்.

கிராம எல்லையில் வீற்றிருக்கும்ம் ஐயனார், ஆசீவகக் கடவுள் என்பது பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் கூற்று

Thursday, May 07, 2020

மனிதனையும், தாவரத்தையும் வேறுபடுத்தும் இரும்பு (Fe)

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது இரத்தம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடல் முழுதும் கொண்டு செல்ல உதவுகிறது. தாவரத்தில் மிக முக்கியமானது பச்சையம் (Chlorophyl) . இது சூரிய ஒளியிலிருந்து உணவை தயாரிக்க உதவுகிறது. விலங்கு மற்றும் தாவரத்தில் முக்கியப் பங்காற்றும் இரு வேறு அங்கங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நம்மை வியக்க வைக்கும். இந்த இரண்டின் மூலக்கூறு அமைப்புகளுமே ஒன்றே ஆகும். அவற்றில் ஒரே ஒரு வேறுபாடு தான் . பச்சையத்தின் நடுவில் உள்ள தாது (Mineral) மெக்னீசியம் (Mg). ஹீமோகுளோபினின் நடுவில் உள்ள தாது இரும்பு (Fe). ஒரு சிறு வேறுபாடு கூட செயல்பாடுகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ( கொரோனோ வைரஸில் திடீர் மாற்றத்தினால் (Mutation) பல்வேறு சிறு மாற்றங்கள் ஏற்படுகிறது என்று படித்த போது ஏனோ நினைவுக்கு வந்தது)