Thursday, May 07, 2020

மனிதனையும், தாவரத்தையும் வேறுபடுத்தும் இரும்பு (Fe)

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது இரத்தம். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடல் முழுதும் கொண்டு செல்ல உதவுகிறது. தாவரத்தில் மிக முக்கியமானது பச்சையம் (Chlorophyl) . இது சூரிய ஒளியிலிருந்து உணவை தயாரிக்க உதவுகிறது. விலங்கு மற்றும் தாவரத்தில் முக்கியப் பங்காற்றும் இரு வேறு அங்கங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நம்மை வியக்க வைக்கும். இந்த இரண்டின் மூலக்கூறு அமைப்புகளுமே ஒன்றே ஆகும். அவற்றில் ஒரே ஒரு வேறுபாடு தான் . பச்சையத்தின் நடுவில் உள்ள தாது (Mineral) மெக்னீசியம் (Mg). ஹீமோகுளோபினின் நடுவில் உள்ள தாது இரும்பு (Fe). ஒரு சிறு வேறுபாடு கூட செயல்பாடுகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆச்சர்யமாக உள்ளது. ( கொரோனோ வைரஸில் திடீர் மாற்றத்தினால் (Mutation) பல்வேறு சிறு மாற்றங்கள் ஏற்படுகிறது என்று படித்த போது ஏனோ நினைவுக்கு வந்தது)


3 comments:

வேளாண்மை செய்திகள் said...

அருமையான விளக்கம் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அன்புடன் R.அன்பரசு.

வேளாண்மை செய்திகள் said...

அருமையான விளக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

வேளாண்மை செய்திகள் said...

அருமையான விளக்கம் ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அன்புடன் R.அன்பரசு.