Tuesday, August 12, 2014

இந்தியாவில் Pepsiயின் வரவேற்கதக்க முயற்சி

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை குறைவாக பெய்யும் வட மாவட்டங்கள் பலவற்றில் முந்திரி பரவலாக பயிரிட படுகிறது. தானே புயல், குறைவான விளைச்சலை கொடுக்கும் ரகங்கள், முறையான முதல்லிடு இன்மை போன்ற பல பிரச்சனைகளால் முந்திரி விவசாயம் பெரிதும் பாதிக்க பட்டது. சில ஆண்டுகள் முன் வரை முந்திரி ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கேரள மாநிலத்தவர் மற்றும் இடை தரகர்களால் முந்திரி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கபட்டு இருந்தார்கள்.

ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது முழுவதும் கேட்காமல் முந்தி கொண்டு பேசுபவர்களை முந்திரி கொட்டை என்பது வழக்கம். இந்த வழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு நினைக்க தோண்றலாம். மற்ற பழங்களில் எல்லாம் பழத்திற்கு உள் தான் கொட்டை இருக்கும். ஆனால் முந்திரி பழத்தில் மட்டும் பழத்தை முந்தி முந்திரி கொட்டை வெளியில் நீட்டி இருக்கும். அதனால் தான் அந்த வழக்கம் வந்தது.

நன்றி Wiki
முந்திரியை பொருத்த வரை முந்திரி பருப்பு நல்ல விலை பொருளாக உள்ளது.ஆனால் ஒவ்வொரு பருப்பிறிகும் மேல் இருக்கும் முந்திரி பழம் மிக பெரிதாக இருக்கும். இதன் சுவையும் நன்றாக இருக்கும். இதற்கு சிறிது உவர்ப்பு தன்மை உள்ளதால் இதில் உப்பு தடவி சாப்பிடலாம். இதன் சுவையே தனி.ஆனால் இந்த பழத்தை பரித்த உடனே உண்ண வேண்டும். இல்லை என்றால் நொதித்தல் ஏற்பட்டு வீணாகி விடும்.இதன் காரணமாக முந்திரி பழத்தை விவசாயிகள் உபயோக படுத்தாமல் அழித்து விடுவார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் போது பல்கலைகழகங்கள் எதாவது செய்து இந்த முந்திரி பழத்தை மற்றும் விளைபொருளாக மாற்றி விட்டால் முந்திரி விவசாயம் மிகவும் லாபகரமானதாக மாறிவிடும் என்று பேசி கொண்டிருப்போம்.அப்போது ஆராய்ந்த போது கோவாவில் முந்திரி பழத்திலிருந்து தயாரிக்க படும் Feni என்ற மது பானம் மிகவும் பிரபலமானது என்றும் கோவா பகுதி விவசயிகள் அதனால் ஓரளவு பயனடைகிறார்கள் என்றும் படித்தோம்.தமிழ்நாடு அரசும் இது போன்ற முயற்சி எடுத்தாலோ அல்லது இந்தியாவில் இருக்கும் மது பான கம்பெனிகள் தமிழகத்தில் இந்த ஆலை அமைத்தால் முந்திரி விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என்று பேசி கொண்டு இருப்போம்.

முந்திரி பழத்திலிருந்து வேறு எந்த உணவு பொருள் எடுக்கும் முயற்சி பெரிய அளவில் எடுக்க பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. தற்போது
பெப்சி நிறுவனம் இந்த முந்திரி பழத்திலிருந்து பழச்சாறு எடுக்க முயற்சி செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த முந்திரி பழ சாறு உபயோகம் உள்ளதை பார்த்த பெப்சி நிறுவனத்தினர் இதை பெரிய அளவில் கொண்டு செல்ல முடிவி செய்துள்ளனர்.பெப்சி நிறுவனம் முந்திரி பழத்திலிருந்து மதுபான வகை தயாரிக்காமல் பழச்சாறு தயாரிக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. பழத்தை பறித்த 24 மணி நேரத்தில் பத படுத்தி சாறு எடுக்க வேண்டும்.அதற்கு கிளிண்டன் தோன்டு நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளனர். கிளிண்டன் தொண்டு நிறுவனத்தின் உதவியால் உருவாக்கபட்ட Acceso Cashew Enterprise என்ற நிறுவனம் தற்போது கோவா பகுதியில் சிறு விவசாயிகளிடமிருந்து  முந்திரி பழத்தை வாங்க தொடங்கி உள்ளது.இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு 2.50 - 3 ரூபாய்க்கு முந்தரி பழத்தை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் 20% கூடுதல் லாபம் கிடைக்கிறது.

முந்திரி பழத்தில் வைட்டமின்கள், பிற சத்துக்கள் மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும் தன்மையுள்ள பொருட்கள் இருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும்  முறையாக விளம்பர படுத்தினால் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகளில் மிக பெரிய சந்தையை உருவாக்க கூடிய சாத்தியகூறு உள்ளது ( அக்காய்பெரிக்கு சந்தையை உருவாக்கியது போல்) . இந்தியாவின் சிறு மற்றும் பெரிய குளிர்பான கம்பெனிகளை அழித்தது என்று பெப்சியை விமரிசித்தவர்கள், பல்லாண்டு காலமாக வீணாகி கொண்டிருந்த  முந்தரி பழம் போன்ற வற்றை  முறையாக பத படுத்தி பழசாறாக மாற்ற முயற்சி எடுக்காத அன்றைய இந்திய பெரு வணிக நிறுவனங்களை பற்றி விமர்சித்து  பேசுவது இல்லை.விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தி கொடுக்கும் பெப்சி நிறுவனத்தின் இந்த முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்.இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி இந்த முயற்சி தற்போது கோவாவில் தான் ஆரம்பிக்க பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மற்றும் தமிழக முந்திரி விவசாயிகள் இந்த முயற்சியை தமிழகத்திலும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
முந்திரி பழம் பற்றி அவற்றின் பயன் பற்றி மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
பழமொழிக்கான கருத்தையும் சொல்லியுள்ளீர்கள்

என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சதுக்க பூதம் said...

நன்றி திரு ரூபன். உங்களுடைய கவிதை படித்தேன். மிகவும் அருமையாக உள்ளது

saamaaniyan said...

முந்திரி பற்றிய தகவல்களில் தொடங்கி பெப்சியின் முயற்சிவரை அழகான நடையில் விளக்கியுள்ளீர்கள் !

நிச்சயமாய் பெப்சியின் முயற்சி வரவேற்க்க தக்கது. இன்றைய கோலா பானமும் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட முயற்சியினால் தொடங்கப்பட்டதுதான் என்பதை உணர்ந்தால் இந்த முயற்சியின் முக்கியத்துவம் புரியும்.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம்

http://saamaaniyan.blogspot.in/2014/08/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

சதுக்க பூதம் said...

நன்றி சாமானியன்