Monday, April 21, 2014

கோச்சடையானுக்காக மோடியை சந்தித்த ரஜினி - பின்னனி தகவல்கள்

சமீபத்தில் சென்னையில் நடந்த மோடி மற்றும்  நடிகர் ரஜினி காந்தின் சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான பின்னனி செய்திகள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. கோச்சடையான் படத்தை சிந்துபாத் தொடர் போல கடந்த சில வருடங்களாக முடிவே இல்லாமல் தொடர்ந்து எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.பல முறை படத்தை பார்த்தும் படம் திருப்தி இல்லாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தும் பட குழுவினருக்கு திருப்தி இல்லையாம்.படகுழுவினருக்கே இந்த நிலை என்றால் மக்களிடம் இந்த படம் எவ்வாறு வெற்றி பெரும் என்று கவலையில் இருந்தவர்களுக்கு கடந்த சில காலங்களாக தமிழ் திரை உலகில் நடந்த சில நிகழ்ச்சிகள்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

கமலஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் படம் இதே போல் தமிழக மக்களை கவரும் விதத்தில் இல்லாமல் இருந்தது.  சாதாரணமாக வெளியிட்டிருந்தால் அதிக பட்சம் ஒரு சில நாட்களே ஓடியிருக்கும். ஆனால் ஜெயா டிவியினருக்கு கேபிள் ரைட்ஸ் கொடுக்கும் பிரச்ச்னையால் தமிழக முதல்வரின் கோப பார்வைக்கு ஆளாகி,படம் வெளியிட தடை விதிக்க பட்டு மாபெரும்  எதிர்ப்பு மற்றும் மீடியா பப்ளிசிட்டிக்கு பிறகு வெளியிடபட்டு வெற்றியும் பெற்றது அனைவருக்கும் நினைவிருக்களாம்.அதே போல் விஜய் படமும்  தமிழக முதல்வரின் கோபத்தால் ஏற்பட்ட தடையால் படு தோல்வியிலிருந்து தோல்வி படம் என்ற நிலைக்கு முன்னேறியது.

பொதுவாக ரஜினி காந்த படம் வெளியாகும் போது அரசிலில்  இறங்குவதாக மறைமுக அறிக்கை அல்லது அரசியல் சார்பு அறிக்கை மூலம் பரபரப்பு ஏற்படுத்த படும். ஆனால் தற்போது அதுவும் "புலி வருது, புலி வருது" கதையை போல் மக்கள் நம்பாமல் இருப்பதால் வேறு வழி பார்த்த போது தான்  கமல் மற்றும் விஜய் படங்களின் சமீபத்திய வெற்றி நினைவுக்கு வந்துள்ளது. ரஜினியின் முக்கிய அரசியல் ஆலோசகரான டாஸ்மாக் புகழ் பத்திரிக்கையாளர் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க ஆலோசனை கொடுத்ததாக கூறபடுகிறது.தேர்தல் களம் சூடு பிடித்து மோடி அலையை கண்டு ஆளும் தரப்பு அஞ்சும் இந்த நிலையில் மோடியை ரஜினியை காந்த் சந்தித்தால் நிச்சயம் ஆளும் தரப்புக்கு கோபம் ஏற்பட்டு கோச்சடையான் பட வெளியீட்டிற்கு தடை ஏற்படுத்துவார் என்று யூகத்தை தெரிவித்துள்ளார்.அவ்வாறு தடை ஏற்படுத்தினால் அதிவே படத்திற்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்துவதோடு , அப்போது அனல் பறக்கும் வசனத்தை மீடியாக்களில் பேசுவதன் மூலம் மக்களின் உணர்ச்சியை தூண்டி கோச்ச்டையானை வெற்றி படமாக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியே ரஜினி - மோடி சந்திப்பு என்று கூறபடுகிறது. இதன் மூலம் கோச்சடையானுக்கு வெற்றி கிடைப்பதோடு, ரஜினி ரசிகர்களின் ஓட்டை பெற்று பா.ஜ.க கூட்டணிக்கு 20க்கும்  மேலான தொகுதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பது அந்த பத்திரிக்கையாளரின் கணக்கு.இதை உணர்ந்த விஜய்யும் அதே   யுக்தியை பயன்படுத்த  உடனடியாக மோடியை சந்தித்தாக கூறபடுகிறது. ஆளும் தரப்பு இந்த வஞ்சக சூழ்ச்சியை புரிந்து கொண்டு திரைபட வெளியீட்டை பிரச்சனையாக்கமல் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காவே எழுதபட்டது. முழுவதும் கற்பனையே. இதுவே உண்மையாக இருந்திருந்தால் நிர்வாகம்  பொறுப்பல்ல!

2 comments:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

saamaaniyan said...

முழுவதும் நகைச்சுவைக்காக எழுதபட்டது என நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும் கற்பனை இந்த கற்பனை தமிழ்நாட்டின் இன்றைய யதார்த்ததுக்கு மிக அருகே இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா வேதனை படுவதா என தெரியவில்லை.

தன் படம் வெளிவராத காலகட்டங்களில் அரசியல் வாய்ஸ் கொடுப்பதும், தன் படம் வெளிவரவேண்டுமென்றால் ஆளும் கட்சி எதுவாகினும் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும் என தன் " கமர்ஷியல் வெற்றி " ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சூப்பர் ஸ்டாரின் சமூக உணர்ச்சி, ஊடங்களை தொடர்ந்து படித்து ,மறக்காமலும் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் !

எனது புதிய கட்டுரை : தேர்தல் திருவிழா !
http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html