சில மாதங்களுக்கு முன் பிரபல பத்திரிக்கையாளர்(?) சோ ராசாமி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பல அறிவுரை கூறியதாகவும் அதை தொடர்ந்து சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் செய்தி வெளியானது. அப்போது ஊடகங்கள் ஜெயலலிதாவை அர்ச்சுனனாகவும், "சோ"வை கிருஷ்ணனாகவும் பாவித்து, அவர் ஏதோ கீதாஉபதேசம் செய்து சசிகலாவையும் நூறு சகோதரர்களையும் அதிகார மையத்திலிருந்து வெளியேற்றி தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற உதவி செய்தது போல் எழுதினர். அதாவது அரசில் நடக்கும் லஞ்ச லாவன்யங்களுக்கு காரணம் அனைத்தும் சசிகலா மட்டுமே என்றும் சசிகலா இல்லவிட்டால் அதிமுக அரசு பொற்கால ஆட்சி கொடுக்கும் என்ற ரீதியிலும் எழுத பட்டது.பத்திரிக்கையாளர் நாட்டு நலன் கருதி முயற்சி எடுத்ததாகவும் விளம்பர படுத்த பட்டது.
அதற்கான தற்போதைய உண்மையான காரணம் வெளி வந்து விட்டது. ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள செய்தியில் திமுக மற்றும் அதிமுக நடத்திய டாஸ்மாக் கூட்டு கொள்ளை பற்றி விவரமாக செய்தி வெளியிட்டுள்ளது.அது மட்டுமல்ல. சசிகலாவை வெளியேற்றிய பின் மிடாசில் ராமசாமிக்கு பதவி கொடுத்ததிலிருந்து இந்த சந்திப்பின் முக்கிய கரணம் பங்குகள் ஒழுங்காக போய் சேராதது தான் என்று அறிந்து கொள்ள முடியும்.
தட்ஸ்தமிழ் இணைய செய்தி
டாஸ்மாக் கடைகளை மூடவே கூடாது என துக்ளக் ஆண்டு விழாவில் அடம் பிடித்த சோ ராமசாமியின் செய்கைக்கு பின் உள்ள உண்மை இதுதான் போல்.
கொள்ளை அடிக்கும் அரசியல்வாதியும், அரசு அதிகாரிகளும் பல நேரங்களில் நீதியின் முன் நிறுத்த பட்டு அரிதாக சில நேரம் தண்டிக்கவும் படுகிறார்கள். ஆனால் ஊழலுக்கு அடித்தளமாக இருக்கும் இது போன்ற தரகர்கள் நல்லவர் வேடமிட்டு எந்த தண்டனையுமோ கவலையுமோ இல்லாமல் நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. இந்த வரிசையில் ஆன்மீகவாதிகளிலிருந்து பல்வேறு வகைபட்ட துறையினரும் அடக்கம்

"சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில் மதுபான நிறுவனங்கள் 3ம் அடங்கும். ஆனால் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்ட பிறகு ஒரே நாளில் சோவும் வெளியேற்றப்படுகிறார். சாராய வியாபாரத்தில் பத்திரிகையாளர் சோ தமக்கு இருக்கும் பங்கு குறித்து தமிழக மக்களுக்கு பதில் சொல்வாரா?"
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/aap-exposing-illegal-political-business-nexus-tn-lse-198110.html#slide613978
டாஸ்மாக் கடைகளை மூடவே கூடாது என துக்ளக் ஆண்டு விழாவில் அடம் பிடித்த சோ ராமசாமியின் செய்கைக்கு பின் உள்ள உண்மை இதுதான் போல்.
கொள்ளை அடிக்கும் அரசியல்வாதியும், அரசு அதிகாரிகளும் பல நேரங்களில் நீதியின் முன் நிறுத்த பட்டு அரிதாக சில நேரம் தண்டிக்கவும் படுகிறார்கள். ஆனால் ஊழலுக்கு அடித்தளமாக இருக்கும் இது போன்ற தரகர்கள் நல்லவர் வேடமிட்டு எந்த தண்டனையுமோ கவலையுமோ இல்லாமல் நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. இந்த வரிசையில் ஆன்மீகவாதிகளிலிருந்து பல்வேறு வகைபட்ட துறையினரும் அடக்கம்
2 comments:
சோ என்கிற மனிதர் பற்றிய உண்மைகள் விரைவில் வெளிவரும் என்று நம்புவோம். இதுபோன்ற பதிவுகளில் அவர் சாதியைப் பற்றிப் பேசாத ஒரே நபருக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபாலன்
//இதுபோன்ற பதிவுகளில் அவர் சாதியைப் பற்றிப் பேசாத ஒரே நபருக்கு எனது வாழ்த்துக்கள்.//
நன்றி கோபலன். பொதுவாக அவர் பற்றிய உண்மைகளை எழுதினால் பல பேருக்கு பிடிக்காது. அவரை பற்றிய உண்மைகளை எழுதும் போது அவரது சாதி பற்றி எழுதாவிட்டால் மீதி பேருக்கு பிடிக்காது!
Post a Comment