Monday, April 21, 2014

கோச்சடையானுக்காக மோடியை சந்தித்த ரஜினி - பின்னனி தகவல்கள்

சமீபத்தில் சென்னையில் நடந்த மோடி மற்றும்  நடிகர் ரஜினி காந்தின் சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான பின்னனி செய்திகள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது. கோச்சடையான் படத்தை சிந்துபாத் தொடர் போல கடந்த சில வருடங்களாக முடிவே இல்லாமல் தொடர்ந்து எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.பல முறை படத்தை பார்த்தும் படம் திருப்தி இல்லாமல் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் மாற்றி எடுத்தும் பட குழுவினருக்கு திருப்தி இல்லையாம்.படகுழுவினருக்கே இந்த நிலை என்றால் மக்களிடம் இந்த படம் எவ்வாறு வெற்றி பெரும் என்று கவலையில் இருந்தவர்களுக்கு கடந்த சில காலங்களாக தமிழ் திரை உலகில் நடந்த சில நிகழ்ச்சிகள்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

கமலஹாசன் நடித்து வெளியான விஸ்வரூபம் படம் இதே போல் தமிழக மக்களை கவரும் விதத்தில் இல்லாமல் இருந்தது.  சாதாரணமாக வெளியிட்டிருந்தால் அதிக பட்சம் ஒரு சில நாட்களே ஓடியிருக்கும். ஆனால் ஜெயா டிவியினருக்கு கேபிள் ரைட்ஸ் கொடுக்கும் பிரச்ச்னையால் தமிழக முதல்வரின் கோப பார்வைக்கு ஆளாகி,படம் வெளியிட தடை விதிக்க பட்டு மாபெரும்  எதிர்ப்பு மற்றும் மீடியா பப்ளிசிட்டிக்கு பிறகு வெளியிடபட்டு வெற்றியும் பெற்றது அனைவருக்கும் நினைவிருக்களாம்.அதே போல் விஜய் படமும்  தமிழக முதல்வரின் கோபத்தால் ஏற்பட்ட தடையால் படு தோல்வியிலிருந்து தோல்வி படம் என்ற நிலைக்கு முன்னேறியது.

பொதுவாக ரஜினி காந்த படம் வெளியாகும் போது அரசிலில்  இறங்குவதாக மறைமுக அறிக்கை அல்லது அரசியல் சார்பு அறிக்கை மூலம் பரபரப்பு ஏற்படுத்த படும். ஆனால் தற்போது அதுவும் "புலி வருது, புலி வருது" கதையை போல் மக்கள் நம்பாமல் இருப்பதால் வேறு வழி பார்த்த போது தான்  கமல் மற்றும் விஜய் படங்களின் சமீபத்திய வெற்றி நினைவுக்கு வந்துள்ளது. ரஜினியின் முக்கிய அரசியல் ஆலோசகரான டாஸ்மாக் புகழ் பத்திரிக்கையாளர் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க ஆலோசனை கொடுத்ததாக கூறபடுகிறது.தேர்தல் களம் சூடு பிடித்து மோடி அலையை கண்டு ஆளும் தரப்பு அஞ்சும் இந்த நிலையில் மோடியை ரஜினியை காந்த் சந்தித்தால் நிச்சயம் ஆளும் தரப்புக்கு கோபம் ஏற்பட்டு கோச்சடையான் பட வெளியீட்டிற்கு தடை ஏற்படுத்துவார் என்று யூகத்தை தெரிவித்துள்ளார்.அவ்வாறு தடை ஏற்படுத்தினால் அதிவே படத்திற்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்துவதோடு , அப்போது அனல் பறக்கும் வசனத்தை மீடியாக்களில் பேசுவதன் மூலம் மக்களின் உணர்ச்சியை தூண்டி கோச்ச்டையானை வெற்றி படமாக்க முடியும் என்று திட்டமிட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியே ரஜினி - மோடி சந்திப்பு என்று கூறபடுகிறது. இதன் மூலம் கோச்சடையானுக்கு வெற்றி கிடைப்பதோடு, ரஜினி ரசிகர்களின் ஓட்டை பெற்று பா.ஜ.க கூட்டணிக்கு 20க்கும்  மேலான தொகுதியில் வெற்றி பெற வைக்க முடியும் என்பது அந்த பத்திரிக்கையாளரின் கணக்கு.இதை உணர்ந்த விஜய்யும் அதே   யுக்தியை பயன்படுத்த  உடனடியாக மோடியை சந்தித்தாக கூறபடுகிறது. ஆளும் தரப்பு இந்த வஞ்சக சூழ்ச்சியை புரிந்து கொண்டு திரைபட வெளியீட்டை பிரச்சனையாக்கமல் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காவே எழுதபட்டது. முழுவதும் கற்பனையே. இதுவே உண்மையாக இருந்திருந்தால் நிர்வாகம்  பொறுப்பல்ல!

Monday, April 14, 2014

அரசியல் தரகர் டாஸ்மாக் ராமசாமி என்கிற சோ ராமசாமி

சில மாதங்களுக்கு முன் பிரபல பத்திரிக்கையாளர்(?) சோ ராசாமி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பல அறிவுரை கூறியதாகவும் அதை தொடர்ந்து சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் செய்தி வெளியானது.  அப்போது ஊடகங்கள் ஜெயலலிதாவை அர்ச்சுனனாகவும், "சோ"வை கிருஷ்ணனாகவும் பாவித்து, அவர் ஏதோ கீதாஉபதேசம் செய்து சசிகலாவையும் நூறு சகோதரர்களையும் அதிகார மையத்திலிருந்து வெளியேற்றி தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற உதவி செய்தது போல் எழுதினர். அதாவது அரசில் நடக்கும் லஞ்ச லாவன்யங்களுக்கு காரணம் அனைத்தும் சசிகலா மட்டுமே என்றும் சசிகலா இல்லவிட்டால் அதிமுக அரசு பொற்கால ஆட்சி கொடுக்கும் என்ற ரீதியிலும் எழுத பட்டது.பத்திரிக்கையாளர் நாட்டு நலன் கருதி முயற்சி எடுத்ததாகவும்  விளம்பர படுத்த பட்டது.

அதற்கான தற்போதைய உண்மையான காரணம் வெளி வந்து விட்டது. ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள செய்தியில் திமுக மற்றும் அதிமுக நடத்திய டாஸ்மாக் கூட்டு கொள்ளை பற்றி விவரமாக செய்தி வெளியிட்டுள்ளது.அது மட்டுமல்ல. சசிகலாவை வெளியேற்றிய பின் மிடாசில் ராமசாமிக்கு பதவி கொடுத்ததிலிருந்து இந்த சந்திப்பின் முக்கிய கரணம் பங்குகள் ஒழுங்காக போய் சேராதது தான் என்று  அறிந்து கொள்ள முடியும்.

தட்ஸ்தமிழ் இணைய செய்தி

"சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில் மதுபான நிறுவனங்கள் 3ம் அடங்கும். ஆனால் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்ட பிறகு ஒரே நாளில் சோவும் வெளியேற்றப்படுகிறார். சாராய வியாபாரத்தில் பத்திரிகையாளர் சோ தமக்கு இருக்கும் பங்கு குறித்து தமிழக மக்களுக்கு பதில் சொல்வாரா?"
 

டாஸ்மாக் கடைகளை மூடவே கூடாது என துக்ளக் ஆண்டு விழாவில் அடம் பிடித்த சோ ராமசாமியின் செய்கைக்கு பின் உள்ள உண்மை இதுதான் போல்.

கொள்ளை அடிக்கும் அரசியல்வாதியும், அரசு அதிகாரிகளும் பல நேரங்களில் நீதியின் முன் நிறுத்த பட்டு அரிதாக சில நேரம் தண்டிக்கவும் படுகிறார்கள். ஆனால் ஊழலுக்கு அடித்தளமாக இருக்கும் இது போன்ற தரகர்கள் நல்லவர் வேடமிட்டு எந்த தண்டனையுமோ கவலையுமோ இல்லாமல் நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. இந்த வரிசையில் ஆன்மீகவாதிகளிலிருந்து பல்வேறு வகைபட்ட துறையினரும் அடக்கம்