Saturday, January 26, 2013

அமெரிக்காவில் கமலின் வருத்த வீடியோ - என் தமிழகம் என்னிடம் விளையாடி பார்த்து விட்டதே!

கமலஹாசன் இன்று சான் பிராசிஸ்கோ வளைகுடா பகுதி தியேட்டருக்கு  விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்காக நேரடியாக வந்திருந்தார். அப்போது விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் வெளியிட முடியாமைக்கு வருந்தி பேசினார். அவர் கூறியதாவது

இந்த திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட முடியாத வருத்தம் என் தமிழ்நாட்டில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள். நானும் தற்போது வெளியில் தான் இருக்கிறேன் .என் தமிழகம் என்னை விளையாடி பார்த்து விட்டதே.அனால் அனைத்தும் மாறும் ஏனெனில் நான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று கூறினார்.
அவருடைய பேச்சை மேலும் கான இங்கு காணொளியை காணுங்கள்.



இந்த நிகழ்ச்சியில் நடந்த கலாட்டா பற்றியும், இந்த படம் பற்றிய இஸ்லாமியர்களின் கேள்விக்கு அவரது பதிலையும் , படத்தின் விமர்சனத்தையும் நாளை பதிவிடுகிறேன்.

5 comments:

ராஜ நடராஜன் said...

கமலஹாசனுக்கு நிகரான வருத்தம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு இருக்கிறது.

வாய்மைதனை சூது கவ்வும் என்பது மட்டும் இப்பொழுது அரங்கேறியிருக்கிறது.

காணொளிப் பகிர்வுக்கு நன்றி.

வவ்வால் said...

//கமலஹாசனுக்கு நிகரான வருத்தம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு இருக்கிறது.//

ராச நட வருந்தி உருகி பத்துகிலோ எடையே குறைஞ்சுப்போயிட்டாரு :-))

வாய்மை என்றால் லிப்ஸ்டிக் தானே, லிப்ஸ்டிக் போட்டவங்களை கவ்வுதா சூது, லோகநாயகர் கூட நிறைய வாய்மையை கவ்வி இருக்கார் :-))

18 மணி நேர பவர் கட், நெல்லுக்கு தண்னியில்லை,குடிக்க கஞ்சியில்லை, விசுவரூபம் வந்திருந்தா எல்லா கவலையும் மறந்திருப்போம், அதற்கும் வழியில்லை, என்னமாதிரியான சமூகம் இது, தனி ஒருவனின் மனக்கவலை போக வழியில்லாத நாடும்,நாட்டு மக்களும் நாசமா போகட்டும் ஹா...ஹ..ஹா

சதுக்க பூதம் said...

வாங்க ராஜ நடராஜன். இந்த படத்தை பற்றி பல்வேறு பார்வைகளில் அலச வேண்டியுள்ளது. அது பற்றி விரிவாக எழுதுகிறேன்.

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால். கஞ்சிக்கி இப்ப பிரச்ச்னையில்லை. பொருளெள்ளாம் ரொம்ப மலிவா/இலவசமா ரேசன் கடையில கிடைக்கிது. விவசாயிகளின் நிலை பற்றி அவர்களுக்கு உள்ள கவலையை விட அந்த பகுதி ஜாதி அரசியல் தலைவர்கள் பற்றிய நாட்டம் பற்றி தான் அதிகம் உள்ளது. அவுங்களே தங்களிடம் உள்ள சமூக வேற்றுமையை தள்ளி வைத்து விட்டு ஒன்று சேர்ந்து போராட தயாராக இல்லை. நீங்கள் சொல்ற மாதிரி இது போன்ற distraction கொண்டு முக்கிய கவலையையை மறந்து இருக்க வேண்டியது தான்.

Anonymous said...

அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!
கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கு.......

please go to visit http://tamilnaththam.blogspot.com/