விஸ்வரூபம் திரைபடத்தை ஹாலிவுட்டில் சென்ற வியாழகிழமை அறிமுக படுத்தினார் கமல். அதை தொடர்ந்து வெள்ளிகிழமை சான்பிரான்சிஸ்கோ குடா பகுதியில் சில திரையரங்கங்களுக்கு நேரே வந்து ரசிகர்களிடம் தனது படத்தை அறிமுக படுத்தினார். இந்த தலைப்பை படித்தவுடன் அமெரிக்காவிலும் இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பால் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். ஹாலிவுட்டில் இது போல் எத்தனையோ படங்களை எடுத்து விட்டனர். பிரச்சனை படத்தில் அல்ல. கமலின் வருகையின் போது செய்ய பட்டிருந்த ஏற்பாட்டில் தான். பிரச்சனை என்னவென்று பார்ப்போம்.
இந்த படத்துக்கு கமல் வருகை தர இருக்கும் நேரத்தில் சிறப்பு கட்டணம் ($40) என்று அறிவிக்கபட்டிருந்தது.தமிழ் ஊடகங்களில் வந்தது போல் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்று தீரவில்லை. கடைசி நேரத்தில் தான் முழுமையாக விற்று தீர்ந்தது.
கமல் ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து திரைபட வாசலில் வைத்திருந்தனர்.எட்டு மணி திரைபடத்திற்கு 7 மணியிலிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. சிறிய தியேட்டர் என்பதால் அந்த பகுதி முழுவதும் சிறிது சிறிதாக கூட்டம் நிரம்ப ஆரம்பித்தது.
பிறகு டிரம்ஸ் போன்ற இசை கருவிகள் வந்திறக்கபட்டன. ஒரு குழுவினர் கமலஹாசன் என்ற பெயரை ஒவ்வொருவரும் ஒரு எழுத்தையும் அவர் படத்தையும் உடையில் அணிந்து நடனமாட தொடங்கினர்.கட் அவுட்டை ஊர்வலமாக வாத்திய முழக்கம் மற்றும் நடனத்துடன் ஊர்வலம் சென்றனர். அந்த பகுதி வழியே சென்ற அமெரிக்கர்கள் கூட்டத்தையும், இரைச்சலையும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.
நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தை கட்டு படுத்தவோ, கமல் அங்கு வந்தால் எந்த வழியாக வருவார், எங்கு பேசுவார், என்ற அறிவிப்போ அல்லது ஏற்பாடோ எதுவும் செய்யவில்லை. கட்டுபாடற்ற கூட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் கமல் தன் குழுவினருடன் (ஆண்ட்ரியா,பூஜா குமார்) போன்றோருடன் வந்திறங்கினர். இரண்டு காவலர் மட்டுமே இருந்தனர். கூட்டத்தில் இருந்த மக்கள் முண்டியடித்து கமலருகே செல்ல முயன்றனர். இரு புறமும் கூட்டம் கமலை நோக்கி முண்டியடிக்க கடுமையான நெரிசலில் சிக்கினார். மக்கள் கடலுக்கிடையே நீந்திய படி தியேட்டரின் உள் சென்றார். இவ்வளவு கஷ்டத்திற்கிடையே தியேட்டர் லாபிக்கு சென்றாலும் அங்கும் அவர் பேசுவதற்கு ஏற்ற ஏற்பாடு எதுவும் இல்லை.இதை அடுத்து மிக கோபமாக வந்த வழியே காரை நோக்கி வெளியேறினார். அவரை காணவும் அவர் பேச்சை கேட்கவும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த வீடியோ மட்டும் YouTube தொடுப்பு
அதன் பிறகு திரைபடம் ஆரம்பித்தது.படம் ஓடி கொண்டிருக்கும் போது பாதியில் நிறுத்தபட்டு ஒரு அறிவிப்பாளர் வந்தார். மிகவும் கஷ்டபட்டு கமலை சமாதான படுத்தி மீண்டும் அழைத்து வந்திருப்பதாகவும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்து அவர் பேசுவதை கேட்குமாறும் சொன்னார்.(இதை முதல்லே செஞ்சிருக்குலாம்ல!). மேலும் கமல் மிகவும் கோபமாக இருப்பதாகவும் உலகெங்கும் சுற்றி பார்த்த அவர் இது போன்ற ரவுடி கூட்டத்தை வாழ்நாளில் எங்குமே பார்த்ததில்லை என்று கூறியதாக சொன்னார்.
பின் கமல் தன் குழுவினரிடம் வந்து பேசினார்.தமிழகத்தில் அவரது படம் தடை செய்யபட்டதன் வருத்தத்தையும், இஸ்லாமியர்களுக்கு அவரது செய்தியினையும் கூறினார். அந்த வீடியோவை முன் பதிவுகளில் வெளியிட்டிருந்தேன்.
தமிழகத்தில் தீடிரென்று ஏற்பட்ட பிரச்சனையிலும், தான் அமெரிக்க ரசிகர்களை சந்திக்க கொடுத்த உறுதிமொழியை தட்டாமல் ரசிகளை சந்தித்து அன்றிறவே இந்தியா பறந்து சென்றார். அவரது இந்த செயல் உண்மையில் பாராட்டதக்கதே.
எது எப்படியோ? வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்ற விஷயத்தில் தங்கள் பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்களோ இல்லையோ, சினிமா விஷயத்தில் தெளிவாக நமது பாரம்பர்யத்தை கடை பிடிக்கிறார்கள்!
கமல் சார் ! இதுக்கெல்லாம் கோவபட்டா எப்புடி? ரசிகர்கள் அப்படியே maintain ஆனா தானே நீங்க இப்படியே maintain ஆக முடியும்!

2 comments:
//ரசிகர்கள் அப்படியே maintain ஆனா தானே நீங்க இப்படியே maintain ஆக முடியும்!
//
ஹி...ஹி அதானே :-))
நம்ம நாட்டில் இவரு ஒரு விழாவுக்கு வர்ராருன்னு டிராஃபிக் ஐ எல்லாம் நிறுத்தி வச்சாங்க ,அந்த நினைப்பில் அமெரிக்காவில் வரவேற்பு இருக்கும்னு நினைச்சிருப்பார்.
ரசிகர்களை ரவுடிக்கூட்டம்னு சொல்லிட்டு ,அப்புறம் என்படத்துக்கு தடை வந்தால் என் ரசிகர்கள் இனிமேலும் பொறுக்க மாட்டாங்கன்னு பீதிய கிளப்பவும் ரசிகர்களை பயன்ப்படுத்துவதேனோ :-))
வாங்க வவ்வால்.நம்ம மக்கள் தான் திருந்தனும் .கட் அவுட்டுல எழுதியிருக்க வாசகத்தை பார்க்கணுமே. கவுண்ட மணி ஜோக்ஸ் கணக்கா இருந்தது.
Post a Comment