Tuesday, October 23, 2012

கூடங்குளம் போராட்டமும் அமைதியாக சாதித்த மம்தா பானர்ஜியும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து காலம் காலமாக மக்கள் கடுமையாக போராடியும் ஒன்றும் செய்ய முடியாததை பார்க்கிறோம். போராட்டத்தை எதிர்த்து அனைத்து ஊடகங்களும், போலீசும்  கடுமையாக தாக்குதல் நடத்துவதை காண்கிறோம்.

ஆனால் எந்த வித எதிர்ப்பும் இன்றி கமுக்கமாக மம்தா பானர்ஜி ஒரு காரியத்தை செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரஸ்ய உதவியுடன் தொடங்க பட இருந்த அணுமின் நிலைய திட்டத்தை தொடங்க விடாமல் அனுமதி மறுத்துவிட்டார். கூடங்குளம் அணுமின் திட்டம் நிறைவேற்ற பட்டவுடன் மேற்கு வங்கத்தில் ஹரிபூரில் அணுமின் நிலையம் தொடங்க இருந்தது. தற்போது  மம்தா அதை தடுத்துள்ளார். தனது மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற மம்தா எந்த அளவிற்கும் இறங்குவார் என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு.

மம்தா பற்றிய ஓர்  flashback செய்தி- ராஜீவ் காந்தி கொலை செய்யபட்ட போது மேற்கு வங்கத்தில் குறிப்பாக  கல்கத்தாவில் தமிழர்களை கொல்ல கிளம்பியது ஒரு கும்பல். அப்போது அந்த கும்பல் முன் தன் ஆதரவாளர்களுடன் தடுத்து அமர்ந்து முதலில் தன்னை தாக்கி விட்டு பிறகு தமிழர்களை தாக்க செல்லுமாறு கூறி போராடி தடுத்தார் (இந்த செய்தியை அப்போது கல்கத்தாவில் இருந்தவர்  கூற கேட்டேன்)!

--

7 comments:

US postal said...

சர்வாதிகாரம் வாழ்க!

நினைத்ததை சர்வாதிகாரிகள் முடிப்பார்கள். அப்பப்போ அநியாய அடக்குமுறை இருந்தாலும் நம் தலைவர்கள் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி. கையாலாகாதவனாக இருப்பதை விட அரக்கனாக இருப்பது மேல்.

கலிகாலம்.

சிவக்குமார் said...

அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்தாலும் மமதாவை மனதாரப் பாராட்டுகிறேன். விவசாயிகளுக்கு எதிராக கடசிக் குண்டர்களையும், காவல்துறைகளை ஏவிய சிபிஎம் கட்சியுடன் ஒப்பிடுகையில் இது மேலானது. இதயே ஜெயலலிதா செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம், அவரோ காவல்துறையை அனுப்பியிருக்கிறார். மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான செய்தி.

சதுக்க பூதம் said...

வாங்க தமிழானவன்,US postal.
//அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்தாலும் மமதாவை மனதாரப் பாராட்டுகிறேன். //
நானும் ஆமோதிக்கிறேன். தன் குடும்பத்தினர் கொள்ளை அடிப்பதற்காக மத்திய அமைச்சர் பதிவியை வாங்காமல் மத்திய அமைச்சர் பதவி மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு முழு நன்மைகளையும் கொண்டு சென்றவர்(முக்கியமாக ரயில்வே அமைச்சர் மூலம்). மக்கள் பிரச்ச்னைக்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தவர்

Anonymous said...

Mr. Bootham, She already done a lot of things to indian people regarding FDI (Walmart - Hilary Clinton - Mamta), so check it once again and write.

- Karuvelan

சதுக்க பூதம் said...

//Mr. Bootham, She already done a lot of things to indian people regarding FDI (Walmart - Hilary Clinton - Mamta), so check it once again and write.
//
இந்த பதிவு மம்தாவின் அனைத்து கொள்கைகளையும் அலசும் பதிவு அல்ல. மேலும் அவர் அணுமின் நிலைய விஷயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டதை தான் குறிப்பிட்டிருந்தேன்

ஜோதிஜி said...

http://tk.makkalsanthai.com/2012/11/blog-post_2589.html


தொடர்ந்து எழுதுங்க.

சதுக்க பூதம் said...

ஜோதிஜி திருப்பூர் என் பதிவை தங்கள் தளத்தில் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி. நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன். ஒரு சில பெரிய கட்டுரை/பதிவை எழுத ஆரம்பித்து நிலுவையிலேயே உள்ளது. கூடிய விரைவில் முடித்து விடுகிறேன். நன்றி