Tuesday, June 05, 2012

சோவியத் கால வாழ்க்கை - ஒரு நேர்கானல்


சோவியத் மறைவுக்கு பின் கம்யூனிசம் உலகெங்கிலும் மறைய தொடங்கி விட்டது. நமக்கும் ,இனி வரும் தலைமுறையினருக்கும்  கம்யூனிசம் ஆட்சி காலத்தில் என்னதான் நடந்ததது என்று தெரிய வாய்ப்பில்லாமலே போகலாம். நான் பள்ளி படிக்கும் நாட்களில் எல்லாம் அதை ஒரு ஆதர்ச சமுதாயமாகவே நினைத்து கொண்டிருந்தேன். அது பற்றிய உண்மைகளை அறிய ஆவலாக இருந்தேன்.

கம்யுனிச ஆதரவு புத்தகங்களில் அதைஒரு utopian சமூகமாகவும் , முதலாளித்துவம் சார்ந்த புத்தகங்களில் அதை ஒரு நரகமாகவும் முன்னிலை படுத்துவார்கள். பிற்காலத்தில் அது பற்றிய நிதர்சன உண்மைகள் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.

என்னுடைய அலுவலகத்தில் நிறைய பேர் சோவியத் நாட்டை சேர்ந்த்தவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சோவியத் மறைய தொடங்கிய காலத்தில் பிறந்த்தவர்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் சோவியத் காலத்தில் (60களில் பிறந்த்தவர்கள் ) பிறந்தவர்கள். அவர்களிடம்  சோவியத் கால கம்யூனிசம் மற்றும் வாழ்க்கை பற்றி தகவல் சேகரித்தேன். 

அதை பதிவாக இட்டால் பலர் சோவியத் கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று பதிவிடுகிறேன் .

இது சோவியத் காலத்தில் அங்கு வாழ்ந்த தனி பட்ட மனிதர்களின் கருத்துகள். அவர்களுடைய விருப்ப வெறுப்புக்கு ஏற்றவாறு சில/பல தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது.

சோவியத் பற்றி நான் பல புத்தகங்கள் படித்திருந்ததாலும் என்னுடைய கருத்துகள் எதையும் கலக்காமல் அவர்களுடைய கருத்துகளை மட்டுமே பதிவிடுகிறேன்.
கேள்வி பதிலாக பதிவிடாமல் அவர் கூறியவற்றை அப்படியே பதிவிடுகிறேன்.

  • சோவியத் யூனியனில் அனைத்து தொழிலாளர்களும் சமம். ஒரே ஊதியம் என்பது உண்மை அல்ல. ஆனால் அதே சமயம் ஊதிய வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.
  • ஓரளவு அனுபவம் கொண்ட சாதாரண தொழிலாளர்களின் ஊதியம் பொறியாளர் போன்ற பட்டம் பெற்றவர்களின் ஊதியத்தை விட அதிகம்?!
  • வேலையின்மையே முழுமையாக கிடையாது.
  • இலவச கல்வி அனைவருக்கும் கிடைத்தது.
  • சோவியத் யூனியனின் கல்வித்தரம் அமெரிக்க கல்வி தரத்தை விட உயர்ந்தது.
  • அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைத்தது.
  • பணவீக்கம் என்பதே கிடையாது. அதாவது பொருட்களின் விலையேற்றம் பெரிய அளவில் கிடையாது.
  • தொழிலாளர்கள் கம்பெனியில் வட்டியில்லா கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். தவணை முறையில் பணத்தை சிறிது சிறிதாக கொடுப்பார்கள்
  • பிரச்ச்னை Supply Sideல் தான் இருந்தது. விலையுயர்ந்த பொருட்கள் வாங்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
  • ஊழல் மற்றும் லஞ்சம் எங்கும் தலை விரித்து ஆடியது.
  • பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து புதிய பிராஜெக்ட் அல்லது தொழிற்சாலைக்கு அனுமதி வாங்குவார்கள். அவர்களுடைய சம்பளம் குறைவாக இருந்தாலும் .சட்ட விரோதமாக லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் சம்பாதிப்பார்கள். உதாரணமாக 20 தொழிலாளர்கள் வேலை செய்வதாக கணக்கு காட்டுவர்கள். தொழிலாளர்களிடம் தனியாக பேசி கொண்டு, அவர்களுக்கு பாதி பணத்தை மட்டும் கொடுத்து விடுவார்கள். தொழிலாளர்களோ வேலைக்கு வராமலேயே பாதி பணத்தை வாங்கி கொள்வார்கள்.
  • பொறியாளர் போன்ற நன்கு படித்து பதவியில் இருப்பவர்களுடைய வருடாந்திர  சம்பள உயர்வு மிகவும் குறைவு.
  • கடின உழைப்புடன் வேலை செய்பவர்களுக்கும் சோம்பேரிகளாக வேலை செய்பவரகளுக்கும் ஒரே சம்பளம் மற்றும் இதர வளர்ச்சியும் இருக்கும். அதன் விளைவு கடின உழைப்பாளர்கள் விரக்தி அடைந்து கடின உழைப்பை  கை விட்டு விடுவார்கள்.
  • சோவியத்  தலைநகரான மாஸ்கோவில் மட்டும் அனைத்து கடைகளிலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். மற்ற பகுதிகளில் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.
  • பால் மற்றும் ரொட்டிக்கு கூட விடிய காலையில் கடுங்குளிரில் வரிசையில் காத்து நின்று வாங்க வேண்டும்.
  • மாபியாக்கள், கருப்பு மார்கெட் மற்றும் பதுக்கல் தலை விரித்தாடியது.
  • ராணுவம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் நல்ல சொகுசு வாழ்க்கை தரம் கிடைத்தது.
  • மொழி வாரி சிறுபான்மையினரின் மொழி வளர்ச்சி கூடிய மட்டும் நசுக்கபட்டு ரசிய மொழி சோவியத் முழுவதும் திணிக்க பட்டது.
  • மத சுதந்திரம் முற்றிலும் கட்டு படுத்த பட்டிருந்தது.
  • சோவியத் வாழ் யூத இன மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில்  முன்னேற விடாமல் தடுக்க பட்டிருந்தனர். ராணுவம் போன்றவற்றில் வேலை வாய்ப்பு கூட மறுக்கபட்டிருந்தது. அவர்கள் சந்தேக கண்ணோடு தான் பார்க்க பட்டனர்.(1970-90க்களில் கூட நிறைய சோவியத் யூதர்கள் அகதிகளாக அமெரிக்கா வந்துள்ளனர்)
  • அறிவாளிகள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றோர் மதிக்க படவில்லை.
  • உள்ளூர் கம்யூனிச கட்சி உறுப்பினர்களில் பலர் நல்லவர்களாக இருந்தார்கள். புதிதாக அவர்கள் பகுதிக்கு வரும் நபர்களுக்கு தேவையான முழு உதவியும் அர்பணிப்போடு செய்வார்கள்.
  • அத்தியாவசிய பொருட்கள் பற்றாகுறை, ஊழல், உற்பத்தி குறைவு, அதீத ராணுவத்துகான செலவு போன்றவையே சோவியத்தின் அழிவிற்கு காரணம்.
--

9 comments:

Prakash said...

இப்படியெல்லாம் இருந்ததற்கு பேரு கம்யூனிச சமூகம் இல்லீங்க

Robin said...

Useful Info.
Thanks.

சதுக்க பூதம் said...

//இப்படியெல்லாம் இருந்ததற்கு பேரு கம்யூனிச சமூகம் இல்லீங்க
//
நிச்ச்யமாக. சோவியத் கம்யூனிச நடைமுறை படுத்தலில் இருந்த குளறுபடியே அதன் அழிவிற்கு காரணமாக இருக்களாம்.

Shekar said...

The article should be appreciated for unbiased reporting. Most of the points appeared in press after the fall of communist regime. It is proved beyond doubt that pure communism cannot survive as pure capitalism cannot survive. Changes are required depending on the thinking and behaviour if the people.

சதுக்க பூதம் said...

//It is proved beyond doubt that pure communism cannot survive as pure capitalism cannot survive. Changes are required depending on the thinking and behaviour if the people//

It is true.Society with huge inequality, poverty etc needs communis.Once all the people recieved basic needs, it needs capitalism along with socialism for some time.

Anonymous said...

வணக்கம் சதுக்கபூதம்

நீங்கள் பேட்டி கண்டவர் கூறும் நிகழ்வுகள் அனைத்தும் தோழர் ஸ்டாலினுடைய மறைவிற்கு பிறகு, சோவியத் பின்னடைவுக்குள்ளான பிறகு, அதாவது புதிய புரட்டல்வாத குருச்சேவ் கும்பலின் அதிகார வர்க்க முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட மாற்றங்களாகும்.

1950 களிலேயே சோவியத்தின் சிதைவு, பின்னடைவுக்கான வேலைகள் திட்டமிடப்பட்டன. ஆனால் அது தோழர் ஸ்டாலினுடைய மறைவிற்கு பிறகு தான் முழுமையாக அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியிலமர முடிந்தது.

எனவே இவர்கள் கூறியிருப்பது அந்த காலகட்டத்தை தான் குறிக்கிறது.

மக்கள் சோவியத்தை யாரும் தோழர் ஸ்டாலினுடைய ஆட்சிகாலத்தில் தான் பார்த்திருக்க முடியும். அந்த காலகட்டத்தில் சோவியத்திற்கு பயணித்த என்.எஸ்.கே, காமராஜர், தாகூர், எழுத்தாளர் அகிலன், நெ.து.சுந்தரவடிவேலு மற்றும் பலரும் தமது பயண நூல்களில் அவற்றை எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக நீங்களும் பல நூல்கள் வாசித்திருப்பதாக கூறியுள்ளீர்கள் அதில் இவர்களுடையதும் இருக்கலாம்.

எனினும் சோவியத்தின் உண்மைச் சித்திரத்தை அறிய இந்த பதிவு வாசகர்களுக்கு உதவலாம்.

http://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

http://www.vinavu.com/2009/11/07/stalin-dvd-intro/

சதுக்க பூதம் said...

வாங்க அம்பேத். அவர் வாழ்ந்தது குருசேவ் காலத்தில் தான். அவரிடம் ஸ்டாலின் காலம் பற்றி கேட்ட போது தெளிவாக எதுவும் கூற வில்லை.ஸ்டாலின் ஏற்ற தாழ்வுகள் நிறைந்து இருந்து, ஏழ்மை மிகுந்த ரஸ்யாவை அதுவும் இரண்டாம் உலக போர் காலத்தில் வழி நடத்தியவர்.அவர் எதிர் கொண்ட சவால்கள் நிறையவையே. தற்போது பெரும்பாலும் குலாக்குகள் பற்ரியும், உக்ரேன் பஞ்சம் பற்றி மட்டுமே புத்தகங்கள் வருகின்றன. அந்த காலத்தில் வந்த புத்தகங்களை படித்துள்ளேன்ஆனாலும் ஸ்டாலினுடைய ஒரு சில செயல்பாடுகளில் உடன்பாடு இல்லை.அனைவரின் அடிப்படை தேவையையும் பூர்த்தி செய்து சமத்துவ சமுதாயம் அமைத்தபின் மக்களை தொடர்ந்து உழைக்க வைக்க கம்யூனிசம் அடுத்த நிலைக்கு செல்ல எந்த மாற்றமும் செய்யாதது கூட மேற்கூறிய நிலைக்கு காரணமாக இருக்களாம்

Anonymous said...

நீங்கள் கூறுவதை ஏற்கிறேன் சதுக்கபூதம். சோவியத் சமூகம் நடைமுறையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது அவை அறிவியல் அனைத்திற்கும் ஏற்படும், அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் அதே பிரச்சினைகள் தான்.

அதை நேர்மறையில் விமர்சனப்பூர்வமாக ஏற்பதும் தவறுகள் நிகழ்ந்ததற்கான காரணங்களை பரிசீலிப்பதும் அதிலிருந்து அனுபவத்தை கற்றுக்கொள்வதும் மீண்டும் தவறுகள் நிகழாத வண்ணம் நடைமுறைப்படுத்துவதும் கம்யூனிஸ்டுகளின் நோக்கம். ஆனால் சில தவறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு தோழர் ஸ்டாலினை இழிவுபடுத்துவதும் அவதூறு செய்வதும் திட்டமிட்டபடி நடக்கிறது.

நீங்கள் கூறியுள்ளது போல தோழர் ஸ்டாலின் ஆட்சி செய்த காலம் கடுமையான சவால்கள் நிறைந்த காலம், அவருடைய அசாத்தியமான நிர்வாகம் தான் 1956 வரை சோவியத் நீடிப்பதற்கே காரணமாக இருந்தது. தோழர் ஸ்டாலினுடைய ஆட்சிகாலத்தை மாவோ மிகச்சரியாக மதிப்பிட்டுள்ளார். வாய்ப்பிருப்பின் மாசேதுங் நூல்களை தேடி வாசித்துப்பாருங்கள். அதே போல இங்கிலாந்தை சேர்ந்த தத்துவத்துறை பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் ‘மார்க்ஸ் முதல் மாவோ வரை என்கிற நூலில் இப்பிரச்சினையை தனி ஒரு அத்தியாயத்தில் விரிவாக ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.

சதுக்க பூதம் said...

//நீங்கள் கூறுவதை ஏற்கிறேன் சதுக்கபூதம். சோவியத் சமூகம் நடைமுறையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது அவை அறிவியல் அனைத்திற்கும் ஏற்படும், அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் அதே பிரச்சினைகள் தான்.

அதை நேர்மறையில் விமர்சனப்பூர்வமாக ஏற்பதும் தவறுகள் நிகழ்ந்ததற்கான காரணங்களை பரிசீலிப்பதும் அதிலிருந்து அனுபவத்தை கற்றுக்கொள்வதும் மீண்டும் தவறுகள் நிகழாத வண்ணம் நடைமுறைப்படுத்துவதும் கம்யூனிஸ்டுகளின் நோக்கம். ஆனால் சில தவறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு தோழர் ஸ்டாலினை இழிவுபடுத்துவதும் அவதூறு செய்வதும் திட்டமிட்டபடி நடக்கிறது.//

மிக சரியான கூற்று

//ஆனால் சில தவறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு தோழர் ஸ்டாலினை இழிவுபடுத்துவதும் அவதூறு செய்வதும் திட்டமிட்டபடி நடக்கிறது.//
சோவியத் யூனியனில் அடிப்படை தேவை அனித்து மக்களுக்கும் பூர்த்தி செய்யபட்டது(இந்த பதிவில் கூறியது போல்) என்ற உண்மை கூட வருங்கால தலைமுறையினருக்கு மறைக்க படலாம்.

//இங்கிலாந்தை சேர்ந்த தத்துவத்துறை பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் ‘மார்க்ஸ் முதல் மாவோ வரை என்கிற நூலில் இப்பிரச்சினையை தனி ஒரு அத்தியாயத்தில் விரிவாக ஆய்வு செய்து விளக்கியுள்ளார்.//

தகவலுக்கு நன்றி. நிச்சயம் அந்த புத்தகத்தை படிக்கிறேன்.