Monday, August 23, 2010

அமெரிக்க அரசின் தங்கத்திற்கு எதிரான போர் ஆரம்பம்?

அமெரிக்க அரசு தனது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவீனங்களை சரி கட்ட புதிய சட்டத்தை(Health Care Reform Act of 2010,-Section 9006) அறிமுக படுத்தி உள்ளது. அந்த புதிய சட்டத்தின் படி $600க்கும் மேல் பொருட்களை விற்றால் முக்கியமாக தங்கம் மற்றும் வெள்ளியை விற்றால் அதனை வாங்குபவர்கள் அமெரிக்க அரசின் வருமான வரி துறையினரிடம் 2012 முதல் IRS க்கு form 1099 மூலம் அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்க பட்டு அரசுக்கு $18 பில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.இதில் என்ன Conspiracy Theory என்று நினைக்கிறீர்களா?ஆது பற்றி அறிய பொருளாதாரத்தையும், சரித்திரத்தையும் சிறிது பின் சென்று பார்ப்போம்.

1500க்களில் இங்கிலாந்தில் வாழ்ந்த கிரஷாம் என்பவரின் கூற்று படி
"Bad money drives out good if their exchange rate is set by law."

அதாவது இரண்டு வகையான பணங்கள் நாட்டில் புழக்கத்தில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் ஒரு பணத்தின் உலோக மதிப்பு அதிகமாகவும் மறு பணத்தின் உலோக மதிப்பை அரசு குறைத்து வெளியிடுகிறது என்றால், அதாவது இரு வேறு நாணயங்களில் 25 பைசாவில் 10கிராம் உலோகம்(உதாரணமாக தாமிரம்) இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அரசுக்கு அதிக அளவு பணம் தேவை தேவை படுவதால் ஒரு நாணயத்தில் 25 பைசாவில் 5 கிராம் மட்டும் உலோகம் வைத்து வெளியிட தொடங்கினால் மக்கள் குறைவாக உலோகம் உள்ள நாணயத்தை முடிந்த அளவு செலவு செய்து அதிக உலோகம் உள்ள முதல் நாணயத்தை சேமித்து வைக்க ஆரம்பிப்பார்கள். நாளாக நாளாக, வியாபாரிகள் முதல் நாணயத்தை கேட்க தொடங்குவார்கள். அதன் விளைவு முதல் நாணயத்தின் மதிப்பு மேலும் அதிகமாக, உலோக மதிப்பு குறைந்த இரண்டாம் நாணயத்தின் மதிப்பு மேலும் குறையும்.இதனை கிரஷாம் விதி என்பார்கள்.


இந்த விதி இரு உலோக அடிப்படையில் உள்ள நாணயத்தை பற்றியது என்றாலும், தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட கூடியது.1930க்களில் அமெரிக்க அரசு தேவைக்காக அதிக அளவு பணத்தை அச்சடிக்க ஆரம்பித்தது. அது வரை முழுமையாக, டாலருக்கு இணையான தங்கத்தை அரசு திரும்பி தரும் நிலையில் இருந்தது. ஆனால் அரசின் பண உற்பத்தியை கண்டு சந்தேகமடைந்த மக்கள் மிக பெறிய பண வீக்கம் அடைந்து பணத்தின் மதிப்பு குறையும் என்ற சந்தேகத்தில் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்கள். பொதுவாக தங்கத்தை பணவீக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் காரணியாக (Hedge against Inflation)மக்கள் நினைப்பது வழக்கம்.டாலருக்கு இணையாக தங்கமும் ஒரு சேமிப்பு மற்றும் பண்ட மாற்று சக்தியாக வளர்வதை கண்ட அன்றைய அமெரிக்க பிரதமர் ரூஸ்வெல்ட் , மக்கள் வைத்திருக்கும் தங்கம் அனைத்தையும் அன்றைய மார்கெட் மதிப்புக்கு பணம் கொடுத்து பறிமுதல் செய்ய தொடங்கினார். மக்கள் தங்கத்தை வைத்திருந்தால் அதை குற்றமாக அறிவித்தார்.

தற்போதைய நிதி நெறுக்கடி மற்றும் தொடர்ச்சியான போரின் காரணமாக அமெரிக்க அரசு மற்றும் வங்கிகளின் பண நெறுக்கடி அதிகமானதால் பல ட்ரில்லியன் டாலர்களை சிறிது சிறிதாக அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் கலக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் சில ஆண்டுகளில் Fractional Reserve System மூலம் மிக அதிகமான பண புழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.இந்த சூழ்நிலையை கிரஷாம் விதியுடன் தொடர்பு செய்து பாருங்கள்.முன்பு சொன்னது போல் மதிப்பு மிக்க முதல் நாணயமாக தங்கத்தையும், மதிப்பு இழந்து கொண்டிருக்கும் இரண்டாம் நாணயமாக பணமும் இருப்பாதாக பாருங்கள்.

இனி அமெரிக்க அரசின் Health Care Reform Act of 2010,-Section 9006 சட்டத்திற்கு வருவோம். மேற் சொன்ன சட்டம் மூலம் அரசுக்கு தங்க விற்பனை பற்றிய அனைத்து செய்தியும் முழுமையாக போய்விடும். யார் யாரிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து விடலாம். மேலும் பிற்காலத்தில் தங்க விற்பனையை தனிமை படுத்தி அதற்கு மிக அதிகமான வரியை விதித்து, சாதாரண மக்களிடமிருந்து தங்க சேமிப்பை அன்னிய படுத்த முயலலாம். நிலமை மோசமானால் ரூஸ்வெல்ட் செய்தது போல் ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.

ஆனால் தங்கத்துக்கு ஆதரவான பொருளியல் வல்லுனர்கள், தங்கம் என்பது பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற சேமிப்பு செல்வமாக உள்ளது. தங்கத்தை அழிக்க முயன்றவர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்கிறார்கள்.

இதையடுத்த அமெரிக்காவில் தங்கத்தை சேமித்து வைத்துள்ள நிறுவனங்கள் , தங்கத்தை அய்ரோப்பிய வங்கிகளுக்க மாற்ற முயல தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கியுள்ளன.

தங்கத்தின் மதிப்பு எவ்வாறு இருக்கும் எனபதை Supply angleலிருந்து பிறிதொரு பதிவில் காண்போம்

--

7 comments:

vasu said...

உங்கள் பதிவுகள் அனைத்துமே என்னை மிகவும் கவர்கின்றன...

சதுக்க பூதம் said...

பாராட்டுக்கு நன்றி வாசு. இது போலே மேலும் பதிவுகள் எழுத முயல்கிறேன்

வடுவூர் குமார் said...

இந்த மாதிரி பதிவுகலெல்லாம் கண்ணில் படாமலே போய்விடுகிறது.
என்னை மாதிரி ஆட்களெல்லாம் இரண்டு முறை படித்தால் தான் கொஞ்சமாவது புரியும் என்று நினைக்கிறேன்.

சதுக்க பூதம் said...

வாங்க வடுவூர் குமார்.

//என்னை மாதிரி ஆட்களெல்லாம் இரண்டு முறை படித்தால் தான் கொஞ்சமாவது புரியும் என்று நினைக்கிறேன்//
இனி வரும் பொருளாதார கட்டுரைகளை மேலும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்

Anonymous said...

very nice article keep up the good work

oruvan said...

//ஒட்டு மொத்த தங்கத்தையும் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து விட்டு, அரசு அடிக்கும் பணத்திற்கு மாற்றாக எதுவுமே இல்லாமல் செய்யலாம்.//

yipadiyellam kudava nadakum ???? Migavum athirchi alikirathu

--Oruvan

சதுக்க பூதம் said...

வாங்க ஒருவன். அமெரிக்காவில் 1930களில் இது நடந்திருக்கிறது