Sunday, August 15, 2010
கிழக்கிந்திய கம்பெனி 5 - கொள்ளை போன செல்வங்கள்
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1
கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்
கிழக்கிந்திய கம்பெனி 3 - தேயிலை அரசியல்
கிழக்கிந்திய கம்பெனி 4 - இந்தியாவின் நெசவு தொழில் - வளர்ச்சியும் வீழ்ச்சியும்
1700ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP உலக GDPல் 2.8% ஆக இருந்தது. இந்தியாவின் GDP 25% ஆக இருந்தது. ஆனால் அதுவே 1850 ம் ஆண்டு இங்கிலாந்தின் GDP 9% ஆக உயர்ந்தும் ஆகவும் இந்தியாவின் GDP 12% ஆக தேய்ந்தும் போனது. இந்த அதிசயம் எப்படி நடந்து என்று பார்ப்போம்.
1600 லிருந்து 1800 வரை ஐரோப்பாவிற்கு வரும் வெள்ளியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிலிருந்து நெசவு,வாசனை மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய செலவிடபட்டது. மேலும் அந்த கால கட்டத்தில் உலக உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் 25% இந்தியா வசம் இருத்தது. அப்போதைய வியாபாரத்தால் கி.இ.கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் இங்கிலாந்து நாட்டிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
அப்போதுதான் கி.இ.கம்பெனிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மொகலாய பேரரசு சிறிது சிறிதாக பலமிழக்க தொடங்கியது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியாளர்கள் சிறிய சிறிய மாகாணங்களை ஆள தொடங்கினர். மேலும் அவர்களுக்குள் பங்காளி சண்டை பெரிய அளவில் நடை பெற்றது. இதை கி.இ.கம்பெனி நன்கு பயன் படுத்த தொடங்கியது. ராணுவ பலம் மூலம் நாடெங்கிலும் தன் கட்டுபாட்டில் உள்ள பொம்மை அரசாங்கங்களை வைக்க தொடங்கியது.அவர்களிடமிருந்து பெருமளவு கம்பெனியும், கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரிகளும் பணம் கறந்தனர்.உதாரணமாக பிளாசி போரின் வெற்றிக்கு பிறகு, மீர் ஜபார் என்னும் பொம்மை ஆட்சியாளரை வங்காள மற்றும் வட இந்திய ஆட்சியில் அமர்த்தி அவரிடமிருந்து சுமார் 37.7 லட்சம் பவுண்டுகளை போருக்கு செலவாக பெற்றனர்.இது தற்போதைய மதிப்பில் டிரில்லியன்களை தாண்டும்.அதன் பிறகு அவர் டச்சு காரர்களுடன் சேர்ந்து கி.இ.கம்பெனிக்கு எதிராக திரும்பியவுடன் அவரை முழுமையாக அகற்றிவிட்டு ஆட்சியை தன் கையில் எடுத்து கொண்டது.
இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்க இனி இங்கிலாந்திலிருத்து தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுவருவதை தவிர்க்க தொடங்கியது. தனக்கு தேவையான பணத்தை அநியாய வரி மூலம் இந்தியர்களிடமிருந்தே பெற்று கொண்டு அந்த பணத்தில் இந்திய பொருட்களை வாங்கி அதை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது.மேலும் இந்தியாவிலிருந்து வரியாக பெற்ற பணத்தின் ஒரு பங்கையும் இங்கிலாந்து அரசுக்கு கொடுத்து இந்தியாவின் மீதான தன் கட்டுபாட்டையும், வியாபார தனி அதிகாரத்தையும் தன்னிடமே வைத்து கொள்ள தொடங்கியது.இதன் விளைவு இந்திய செல்வங்களை கி.இ.கம்பெனி அட்டையாக உரிய தொடங்கியது.இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்திலிருந்து பணம் செலவு செய்யாமலேயே ஒரு பக்க வர்த்தகமாக இந்திய்-இங்கிலாந்து வர்த்தகம் மாறியது.
முகலாயர்கள் காலத்தில் ஜமீந்தார்கள் என்போர் விவசாயிகளிடம் வரி வசூலித்து அரசுக்கு கொடுக்கும் பணியாளர்களாக இருத்தார்கள். ஆனால் கி.இ.கம்பெனியோ இந்திய நிலங்களை ஜமீந்தார்களிடம் ஏலம் விட தொடங்கியது. யார் அதிக வரி தருகிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என அறிவித்தது. நிலம் ஏலத்தில் விடுவதால் ஏல தொகை அதிகமானது. அதன் விளைவு கம்பெனிக்கு லாபமும்,விவசாயிகளுக்கு கடுமையான இழப்பும் ஏற்பட்டது. ஜமீந்தார்கள் கடுமையான முறைகளை பின் பற்றி விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தனர். அவர்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை என்றால் நிலம் அவர்களிடமிருத்து பிடுங்க பட்டு மீண்டும் ஏலம் விட படும். இதன் முக்கிய விளைவு என்ன என்றால் நிலத்தின் உரியாளர்களான ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தின் உரிமை பிடுங்க பட்டு ஜமீந்தார்கள் கைக்கு போனது. உண்மையான நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்களாக்க பட்டனர்.இம்முறைக்கு ஜமீந்தாரி முறை என்று பெயர்.ஜமீந்தாரி முறையினால் சுமார் 2 கோடி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் இன்னும் முறையாக நில் சீர்திருத்தம் நடை பெறாததால் இழந்த நிலங்களை இன்னும் அவர்கள் பெற வில்லை. அதன் விளைவை தான் நாம் தற்போது மாவோயிஸ்ட் இயக்கமாக வட மற்றும் வட கிழக்கு இந்தியாவில் பார்க்கிறோம்.
தென்னிந்திய பகுதியில் கி.இ.கம்பெனி ரியோத்வாரி முறை என்னும் முறையை அமுல் படுத்தியது. இதன் படி நிலத்தின் உரிமை விவசாயிகளிடமே இருக்கும். அவர்கள் நேரிடையாக வரியை அரசிடம் கொடுக்க வேண்டும். அவர்களால் வரியை கொடுக்க முடியவில்லை என்றால் நிலம் பிறறிடம் கொடுக்கபடும். இது ஒருவகையில் ஜமீந்தாரி முறையை விட நல்ல முறையாக இருந்தாலும் சிறு விவசாயிகள் , ஒரு சில வருடங்கள் பருவ மழை பொய்ப்பின் காரணமாக வரி கட்ட முடியவில்லை என்றால் அவர்கள் நிலத்தை இழக்கும் அபாயம் இருந்தது.
அதிக வரியை கொடுக்க வேண்டி இருந்ததால் விவசாயிகள் உணவு பயிரிலிருத்து பணபயிர்களுக்கு(பருத்தி) மாற நிர்பந்திக்க பட்டனர்.மேலும் முகலாயர் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டால் மன்னர் அவ்வப்போது வரி விலக்கு அளிப்பது வழக்கம். ஆனால் கி.இ.கம்பெனியினருக்கோ லாபம் ஒன்றே குறிக்கோள். எனவே எப்படி பட்ட பஞ்சம் வந்தாலும் அவர்களுக்கு பணம் வந்து சேர வேண்டும் அதன் விளைவு வங்காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்
முன் பதிவில் கூறியது போல் நெசவாளர்களும் துன்புறுத்தபட்டு குறைந்த லாபத்தில் அனைத்து துணிகளையும் கி.இ.கம்பெனிக்கு விற்க வற்பறுத்தபட்டார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் துணிகளை வாங்கி இங்கிலாந்தில் நிறைந்த விலைக்கு விற்றும் கம்பெனி நல்ல காசு பார்த்தது.
இவ்வாறாக இந்தியாவிலிருந்து கி.இ.கம்பெனியால் சுரண்டபட்ட செல்வத்தின் மதிப்பு வருடத்திற்கு 2 மில்லியனை தாண்டும் என கணக்கிடபட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்ன என்றால், இந்த பணம் தான் இங்கிலாந்தின் தொழில் புரட்சி நடப்பதற்கு தேவையான மூலதனமாக இருந்தது.தொழிற்புரட்சிக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்க 0.6 - 2 மில்லியன் பவுண்டுகள் தான் இங்கிலாந்திற்கு தேவை பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி முழுமையாக வளர்ச்சி பெற்ற பின் இந்திய - இங்கிலாந்தின் வணிக போக்கு வேறு மாதிரி திரும்ப தொடங்கியது. இங்கிலாந்து தொழிற் சாலைகளுக்கு தேவையான மூல பொருட்களை(பருத்தி, இரும்பு போன்றவை) குறைந்த விலைக்கு இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது கி.இ.கம்பெனி. அந்த மூல பொருட்களை கொண்டு மதிப்பு கூடிய பொருட்களை இங்கிலாந்தில் உற்பத்தி செய்து அதை மிக அதிக விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்தது. அதன் விளைவு, இந்திய செல்வங்கள் பெருமளவு இங்கிலாந்து நோக்கி செல்ல ஆரம்பித்தது.
அடுத்த பதிவில் கி.இ.கம்பெனி இங்கிலாந்தில் செயல் பட்ட விதம் மற்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்குமான உறவு பற்றி பார்ப்போம்.
--
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இன்று மட்டும் வாழ்கிறதா என்ன? நம் நாட்டை நம்மை சேர்ந்தவர்களே சுரண்டி அயல் நாட்டிற்க்கு விசுவாசமாக அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.கீழே உள்ள இணைப்பைக்கானவும்.
//Indian temple sculpture of gods and goddesses, antiques, pichwai paintings, shatoosh shawls, coins, and you name it, were transported to Italy to be first displayed in two shops [see Annexure-16] owned by her sister, Anuskha alias Alessandra Maino Vinci. These shops located in blue-collar areas of Rivolta[shop name: Etnica] and Orbassano [shop name: Ganpati] did little business because which blue collar Italian wants to buy Indian antiques ? The shops were there to make false bills, and thereafter these treasures were taken to London for auction by Sotheby’s and Christies.
Some of this ill-gotten money from auction went into the bank accounts of Rahul Gandhi in the National Westminister Bank and Hongkong & Shanghai Bank, London branches, but most of it found it’s way into the Gandhi family account in the Bank of America in Cayman Islands. Rahul’s expenses and tuition fees for the one year he was at Harvard, was paid from that Cayman Island account [see Annexures-17]. //
http://www.janataparty.org/soniaisthemodern.html
வாங்க கக்கு மாணிக்கம்.கொள்ளை அடிப்பவர்கள் எந்த நாட்டிலும், எந்த கட்சியிலும் இருக்கிறார்கள். கிழக்கு இந்திய கம்பெனி என்பது முதல் வெற்றிகரமான பன்னாட்டு கம்பெனி. அது எவ்வாறு செயல்பட்டது , அதன் செயல் பாட்டிற்கும் தற்போது உள்ள பன்னாட்டு கம்பெனிகளின் செயல் பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை பற்றி அறிய இத்தொடரை எழுதுகிறேன்.
அருமையான பதிவு... இந்தியாவில் இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சி பற்றியும் எழுதுவீர்களா?
நன்றி வாசு. அங்கிலேயர்களின் நேரடி ஆட்சி பற்றி எழுத ஆசை தான். தற்போது நேரமின்மையால் சில காலம் கழித்து நிச்சயம் எழுதுகிறேன். தற்போது பசுமை புரட்சி,அதன் பின்னனி,கற்காலத்திலிருந்து எவ்வாறு விவசாயம் வளர்ச்சி அடைந்தது, மரபணு மாற்ற தொழில் நுட்பம் பற்றிய விளக்கம் பற்றி எழுதலாமா அல்லது பணம் எவ்வாறு தோன்றியது,பலவகை பொருளாதார கோட்பாடுகள்(கீனிசியன்,ஆஸ்ட்ரியன் etc),தற்போதைய உலக பொருளாதாரம் எவ்வாறு செல்கிறது என்பது பற்றிய தொடர் பதிவு இடலாமா என்று யோசித்து வருகிறேன்
மகிழ்ச்சி... நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே என் விருப்பமான தேர்வுகளே...
Post a Comment