Sunday, October 25, 2009

இப்படியும் ஒரு பொழைப்பு!

ஒவ்வொரு கம்பெனியும் திவாலாகும் போது அதை ஏற்று நடத்தும் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பு அளவிட முடியாததாக இருக்கும். இது தானே நாம் அனைவரும் நினைப்பது.ஆனால் உண்மை அது இல்லை. கேட்க ஆச்சிரியமாக இருக்கிறதா? திவாலாகும் நிறுவனத்தை ஏற்று நடத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. இது நடப்பது அமெரிக்காவில்.

சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் போது ஒரு சில வலுவான கம்பெனிகளும் நட்டமடைந்து திவாலாகும் நிலைக்கு வர வாய்ப்புண்டு. ஆனால் அந்நிறுவனங்களுக்கு அதிக அளவு சொத்துக்களும், சந்தையில் நல்ல பிராண்டு பெயரும் இருக்கும். அதை வீணாக்காமல் புதிய தனியார் முதலீட்டு நிறுவனம் அது போன்ற திவாலாகும் நிறுவனங்களை திவாலுக்கு பின் புதிதாக எடுத்து நடத்தும். ஒரு முறை இது போல் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான். அடுத்த சில வருடங்களில் தொடர்ச்சியாக இது போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் வீழும் நிறுவனத்தை சூறையாடி விடுவார்கள். அதன் முதன்மை முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பர். வேலை செய்பவர்களும் பல இன்னலுக்கும் வேலை இழப்பிற்கும் உள்ளாவார்கள் ஆனால் அதை ஏற்று நடத்தும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.

எப்படி என்கிறீர்களா?. உதாரணமாக ஒரு நிறுவனம் திவாலாக போகிறது என்று வைத்து கொள்வோம். அது திவாலான உடன் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அதை புதிதாக எடுத்து நடத்தும். திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிமாட்டு விலையில் இருக்கும். தனியார் முதலீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு குறைந்த விலைக்கு இந்த நிறுவனத்தை வாங்குவார்கள். அதை வாங்குவதற்கு மற்றும் நடத்துவதற்கு என்று அந்நிறுவன பணத்தையே தட்சணையாக பெருவர். பல மில்லியன் டாலர்களையும் சிறப்பு டிவிடெண்டாக பெருவர். அமெரிக்க வங்கிகளும் இந்த நிர்வாக மாற்றம் மற்றும் பாண்டுகளை விற்க என பல மில்லியன் லாபம் அடைவர்.

இதற்கெல்லாம் பணம் எவ்வாறு வருகிறது என்று கேட்கிறீர்களா? இந்நிறுவனத்தை அளவுக்கு மீறி கடன் வாங்க வைப்பர்கள்.வாங்கிய கடனின் பெரும் பகுதியை மேற் கூறிய வகையில் சுருட்டி கொள்வார்கள். மீதி பணம் மட்டும் கம்பெனியின் வளர்ச்சிக்கு செலவிடபடும்.இவ்வாறாக ஏற்று நடத்தும் ஒரு சில வருடத்தில் முதலை எடுத்து கொண்டு நன்கு லாப பணத்தையும் எடுத்து கொல்வார்கள். பிறகு கம்பெனி நிலை மீண்டும் மோசமானவுடன் அதை மீண்டும் திவாலாக்க அறிவிப்பார்கள். தற்போது வேறொரு தனியார் முதலீட்டு நிறுவனம் அதை எடுத்து நடத்தும். ஆனால் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றாகாவே இருக்கும். கம்பெனியின் கடன் அதிகமாகும். அதை எடுத்து நடத்தும் நிறுவனம் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக லாபமடையும்.10 - 12 வருடங்களில் கரும்பு சக்கையை புழிவது போல் பணத்தை ஒவ்வொரு தனியார் நிதி நிறுவனங்களாக புழிந்து எடுத்து சக்கையாக்கி போட்டு விடுவார்கள்.

உதாரணமாக சிம்மன்ஸ் என்கின்ற படுக்கை தயாரிப்பு கம்பெனி 1991ம் ஆண்டு வெறும் $164 மில்லியன் கடன் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கூறியவாறு பல தனியார் முதலீட்டு கம்பெனிகளின் கைக்கு சென்று அதன் கடன் $1.3 பில்லியனாக மாறி விட்டது. தனியார் முதலீட்டு நிறுவனக்களோ திவாலாகி கொண்டிருந்த அந்த நிறுவனத்திலிருந்து சுமார் $750 மில்லியன் லாபம் எடுத்து விட்டனர். அந்த கம்பெனியின் கடன் பாண்டுகளை வாங்கியவர்களுக்கோ $575 மில்லியனுக்கும் மேலாக நட்டம். ஒவ்வொரு முறை அது கடன் வாங்கும் போதும் அதன் வட்டி அதிகமாகி கொண்டே செல்வதால் அது போன்ற நிறுவனக்களை பொருளாதார சரிவு நேரங்களில் வெற்றிகரமாக நடத்துவதும் கடினம்..

ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் கம்பெனியை மீண்டும் லாபமாக நடத்த முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் தற்போது ஒட்டுண்ணியாக பணத்தை உறிஞ்சும் செயல் இவ்வகை நிறுவனங்களிடம் அதிகரித்து உள்ளது

2003 லிருந்து 2008ம் ஆண்டு வரை மட்டும் தனியார் நிதி நிறுவனங்களால் கட்டு பாட்டுக்கு எடுக்க பட்ட 188 கம்பெனிகளிலிருந்து மட்டும் சுமார் $75 பில்லியன் கடனாக பெறபட்ட பணம் தனியார் நிதி நிறுவனக்களுக்கு டிவிடென்டாக சென்று கம்பெனிகளை கடனில் மூழ்கடிக்க செய்துள்ளது.

திவாலாகும் நிறுவனத்திலிருந்தும் பணத்தை கறக்கும் அதிசயம் இன்றும் நடந்து கொண்டுள்ளது. இப்படியும் ஒரு பொழைப்பு!

--

12 comments:

வலசு - வேலணை said...

நல்லவொரு பகிர்வு. நன்றி

சதுக்க பூதம் said...

நன்றி வலசு - வேலணை

Unknown said...

"Where wealth accumulates, men decay" - Ruyard Kipling.

பிராடு பண்ணுவதில் இவ்வளவ்வு வகையா? முதளித்துவதின் இருண்ட முகம்.

சதுக்க பூதம் said...

//"Where wealth accumulates, men decay" - Ruyard Kipling.//

உண்மை.ஒரு சில தனியார் முதலீட்டு நிறுவனங்கள் நட்டத்தில் ஓடும் கம்பெனிகளை வாங்கி திறமையாக செயல் பட வைக்கின்றனர். ஆனால் பதிவில் உள்ளது போல் நிறையவே நடக்கவூம் செய்கிறது

Gowtham.D said...

சார் தங்கள் படைப்புகள் மிக ஆக்கபூர்வமாக உள்ளது. அண்மை காலமாக சீனா உடன் அதிகரித்து வரும் எல்லை டென்ஷன் காரணமாக சீனாவில் இருந்து இம்போர்ட் செய்யப்படும் சரக்குகளை வாங்கவேண்டாம் என்னும் கருத்து மக்கள் மத்தியில் பரவி வருகிறது . இது அக்கபூர்வமானந்தா?இது மேலும் சூழ்நிலையை மோசமாக்காதா ? -விவரியுங்கள் ப்ளீஸ் ?..

Gowtham.D said...

சார் தங்கள் படைப்புகள் மிக ஆக்கபூர்வமாக உள்ளது. அண்மை காலமாக சீனா உடன் அதிகரித்து வரும் எல்லை டென்ஷன் காரணமாக சீனாவில் இருந்து இம்போர்ட் செய்யப்படும் சரக்குகளை வாங்கவேண்டாம் என்னும் கருத்து மக்கள் மத்தியில் பரவி வருகிறது . இது அக்கபூர்வமானந்தா?இது மேலும் சூழ்நிலையை மோசமாக்காதா ? -விவரியுங்கள் ப்ளீஸ் ?..

சதுக்க பூதம் said...

வாங்க கௌதம்.
நிச்சயமாக சீன பொருட்கள் இந்தியாவிற்கு வருவது நல்லதல்ல. சீனாவிலிருந்து வரும் பொருட்கள் பெரும்பாலும் உற்பத்தி துறையை சார்ந்த உடல் உழைப்பால் உருவாகும் பொருட்கள். அது போன்ற தொழில் துறையில் தான் இந்தியாவில் குறைவான படிப்பறிவு கொண்டவர்கள், விவசாயத்திற்கு மாற்றாக வேலை தேடி செல்பர்கள் வேலை செய்கிறார்கள். இப்பொருட்களின் வரவால் இவ்வகை தொழிலாளிகளுக்கு பெரும் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும்.

மேலும் சீனாவில் அவ்வரசு தொழில் துறையினருக்கு பல சலுகைகளை வழங்குகிறது. தொழில் துறையினருக்கு மூல பொருட்களை குறைந்த விலைக்கு கிடைக்க வழி செய்கிறது. மேலும் மின் கட்டணம் போன்ற பிற செலவுகளையும் குறைக்க வழி செய்கிறது.மேலும் ஏற்றுமதிக்கும் அதிக அளவு சலுகை கொடுக்கிறது. எனவே இந்திய தொழில் துறையினரால் சீன பொருட்களோடு போட்டி இடுவது கடினம்.

நீங்கள் மேல் நாட்டுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல் தானே சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது என்று நீங்கள் வாதிடலாம். மேலை நாடுகளில் முன்பே மக்களின் வாழ்க்கை தரம் நன்றாக உள்ளது. தற்போது ஏற்படும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகை வளர்ச்சி இல்லை. எனவே அவர்கள் பல வேலைகளை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இந்தியா மற்றும் சீனாவின் நிலையே வேறு.
அதுமட்டுமின்றி சீனா பொருட்கள் இறக்குமதியால் அண்ணிய செலாவணியும் அதிக அளவு இழப்பு ஏற்படுகிறது.

Gowtham said...

சார்,
புரிகிறது.மிக்க நன்றி.உங்கள் முயற்சிகள் தொடர வாழ்துக்கள்.தங்களால் எங்கள் பொருளாதார அறிவு விரிவடைகிறது.

Tamil Home Recipes said...

அடேயப்பா

Gowtham said...

Sir,
When ll b ur nxt post.Waiting.........

சதுக்க பூதம் said...

வாங்க கௌதம். நிச்சயம் சீக்கிரம் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.வேலை பலு அதிகம் இருப்பதால் சில நாட்கள் எழுத முடியவில்லை

Unknown said...

அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.