Monday, October 19, 2009

சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

இந்தியாவுக்கு எதிராக சீனா நகர்த்தி வரும் காய்களை பற்றி தெளிவாக விவரிக்கும் இந்திய பத்திரிக்கைகள், சீனா வளர்ச்சி அடைய செய்யும் முயற்சிகளை பற்றியும் இந்தியா எந்த அளவு பின் தங்கி உள்ளது என்பது பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதில்லை!. இது பற்றிய செய்தியும் விழிப்புணர்வும் சராசரி இந்தியருக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல்வாதிகளுக்கு அது பற்றிய அக்கறை சிறிதும் இல்லை. அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கும் என் நண்பன் ஒருவன் பேசும் போது கூறிய செய்திகள் மிகவும் ஆச்சிரியமாக இருந்தது.

சீனாவின் பல்கலைகழகங்கள் எவ்வாறு அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் மனித வளத்தை பெருக்க முயற்சி செய்கிறது என்பது பற்றியது தான் அந்த செய்தி. சீனாவிலிருந்து ஒரு சில அறிவியல் வல்லுனர்கள் அமெரிக்காவுக்கு சில மாத காலத்திற்கு வந்து தங்கி இருந்து, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடு படும் சிறபபான சீன மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பேசி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து சீன பல்கலைகழகங்களில் வேலை செய்ய அழைத்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் வேலையே இது போல் அறிவியல் வல்லுனர்களை அங்கு கூட்டமாக அழைத்து செல்வது தானாம். அது மட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து செல்லும் பேராசிரியர்களுக்கு ஐந்து வருடத்திற்கு இத்தனை அறிஞ்சர்களை அமெரிக்காவிலிருந்து அழைத்து வர வேண்டும் என்று ' Target ' வைத்து ஆட்களை இழுக்கிறார்களாம். இது மட்டுமன்றி பலவாறாக அறிவியல் வல்லுனர்களை சீனா நோக்கி தூண்டில் போட்டு கொண்டு செல்கின்றனராம். தற்போது சீனா வெளிநாட்டு விஞ்ஞானிகளையும் அழைத்து கொள்ள முடிவெடுத்துள்ளனராம்.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள என் நண்பர் (மரபனு மாற்றம் மூலம் வெற்றிகரமாக புதிய பயிர் வகையை இந்தியவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்தே உருவாக்கியவர்) ஒருவரிடமிருந்து கேட்ட செய்தி. இந்தியாவில் தமிழகத்தில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் எடுக்க போகிறார்கள். அதற்கு அடிப்படை தேவை 10 - 25 லட்சம் மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலை கழகங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது. இந்த ஊழல் துனைவேந்தர் பதவி நியமனத்தில் இருந்து தொடங்குகிறது. எல்லா மட்டத்திலும் இது புகுந்து விளையாடுகிறது.

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது பல்கலை கழகங்கள். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் தொழில் வளர்ச்சியின் முழு முதல் காரணம் பல்கலை கழகங்கள். பெரும்பான்மையான கண்டு பிடிப்புகள் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முக்கியமாக அடிப்படை ஆராய்ச்சிகள் அனைத்தும் நடப்பது பல்கலை கழகத்தில் தான். முதலாளித்துவ நாடுகளில் பல்கலை கழகத்தில் நடக்கும் ஆராய்ச்சியின் பயனை இறுதில் தனியார் கம்பெனிகள் அறுவடை செய்யும்.

இந்திய அரசு துறையினரால் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதியும் அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல்கலை கழகங்களில் இருக்கும் அரசியல்வாதிகளின் கைகளுக்கும் தான் பெருமளவு செல்கிறதே அன்றி உண்மையான விஞ்ஞானிக்கு ஒரு பகுதியே செல்கிறது.
பன்னாட்டு கம்பெனியினர் தன் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் பெரு வளர்ச்சி அடைவதை பற்றி பேசுபவர்கள் கூட இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட படும் தொகை எந்த அளவுக்கு ஒழுங்காக ஆராய்ச்சிக்கு செல்கிறது, அதன் மூலம் கண்டு பிடிக்க பட்டவை என்ன? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
அதைவிட மிக கவலைக்குறிய செய்தி தற்போது ஆராய்ச்சி செய்ய வரும் இடுத்த தலை முறையினர் நிலை. தற்போது பேராசிரியர்களாக இருப்பவர்கள் 20 - 40 வருடத்திற்கு முந்தய தொழில்நுட்பம் மட்டும் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஆராய்ச்சி செய்ய வரும் மாணவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் தலைப்பு ஒன்றுக்கும் உதவாத 20 வருட பழைய ஆராய்ச்சி தலைப்பாக இருக்கும். தற்போது இந்தியாவில் செய்யபடும் ஆராய்ச்சிகளில் பெரும்பான்மையானவற்றை தலைப்பு கொடுத்தவுடனேயே அறையில் அமர்ந்தே 4 மாதத்தில் எழுதி விட முடியும்.. ஒரு சில பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி கட்டுரையை பரிசீலிக்கும் பொறுப்பு அந்த துறையில் புகழ் வாய்ந்த வெளி நாட்டு அறிஞ்சர்களிம் அனுப்புவார்கள். முன்பெல்லாம் அது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா போன்ற இடங்களில் உள்ள பெரிய ஆரய்ச்சி கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளிடம் செல்லும். தற்போது அது வங்காளதேசம், சூடான், எத்தியோப்பியா போன்ற தேசங்களில் வேலை பார்க்கும் பேராசிரியர்களிடம் செல்கிறது.

இந்தியாவில் CCMB(Center for cellular and Molecular Biology)போன்ற ஒரு சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இதற்கு மாற்றாக நல்ல ஆராய்ச்சியாளர்களை இருத்து உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி செய்தாலும் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் தரம் வாய்ந்த 10 பல்கலைகழகங்களாவது இருக்க வேண்டும்

பல்கலை கழகத்தையும் அங்கு நடக்கும் ஆராய்ச்சியையும் வலுபடுத்தாமல் எந்த நாடும் வல்லரசாக முடியாது. மிகவும் அதிர்ச்சியான செய்தி,இந்தியாவில் இது பற்றிய விவாதம் கூட பெரிய அளவில் தொடங்க வில்லை. இந்தியாவில் அரசயல்ப்வாதிகளுக்கும் இது பற்றி கவலை இல்லை. இந்தியா வல்லரசாகும் என்று கனவு கொண்டிருக்கும் சிந்தனை வாதிகளும் கனவில் இருந்து வெளி வந்து அதை செயல் படுத்த நேரம் இல்லை.

5 comments:

கையேடு said...

மிகவும் சரிங்க.. முழுவதும் உடன்படுகிறேன். பல்கலைக்கழகங்களின் நிலை மிகவும் மோசமாகவேயுள்ளது..

Unknown said...

இந்தியாவில் குறை உள்ளது, திருத்த வேண்டும், சரி. சீனாவின் முறையை பின்பற்ற வேண்டுமா?

லஞ்சம் ஒலிக்க கடுமை தேவை. அதே சமயம், உலகில், அமெரிக்க உட்பட, எல்லா நாட்டிலும் லஞ்சம் உள்ளது. சீனா தவிர எந்த சுதந்திர நாட்டில் இருந்தும் கற்கலாம். நமக்கு சீனாவின் சர்வாதிகார முறை வேண்டம்.

இப்படி புரோக்கர் அனுப்பி ஆள் பிடித்து விஜ்னனிகள் செடி போல வளர்த்துவது கேவலம். ஒரிஜினல் அறிவியல் அப்படி பட்ட சிஸ்டம்மில் உருவாக முடியாது. சுதந்திரம் இல்ல நாட்டில் சுத்த அறியியல் வளராது.

அடிப்படை இலவச கல்வி, ஊக்க தொகை கொடுத்து ஊகுவிதலே நம் மக்கள் நாட்டுக்காக நெருப்பில் குதிபார்.

அடிப்படை கல்வியில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் உணர்த்தி, டாக்டர், என்ஜின்ஈர் போதை தெளிவிதலே பாதி கடல். ஆசிரியர் சம்பளம் உயர்வால் அறிவுள்ள மாணவர்கள் அதிகம் வருவர். ஒரு நல்ல கல்வி சுற்றுசுழால் உருவகினலே ஆராய்ச்சி பெருகேடுக்கும்.

லஞ்ச ஒழில்லிபில் இரண்டு வழி தான் உள்ளது. ஒன்று கடுமை, இரண்டு விழிப்புணர்ச்சி. கடுமை அடக்கும். விழிப்புணர்ச்சி அழிக்கும்.
கொஞ்சம் கஷ்டம் தான். பொறுமை வேண்டும். இந்த தலைமுறை மீது நம்பிக்கை வைப்போம்.

என்னதான் பனைமரம் மாதிரி வளர்ந்தாலும் சீனாவில் அடிப்படை மனித உரிமை இல்லை.
வேகமாக வளர வேண்டுமானால் மனித உரிமை தியாகம் செய்ய வேண்டும் என்றால் இந்தியா மெல்லவே வளரட்டும்.

சீனாவுடன் போட்டி போடுகிறேன் பேர்வழி என்று நாமும் சீனா போலவே ஆக வேண்டம். நமக்கு தொந்திரவு கொடுத்தால் ஓங்கி அறைந்து விட்டு நம் வேலையை பார்க்க வேண்டும். வளர்ச்சி என்று கண்ணை மூடிக்கொண்டு ஒடக்குடது. குஜராத்தில் லஞ்சம் இல்லை, பணம் கொழிக்கிறது. அதே சமையம் இன கொலையும் நடக்கிறது.

காங்கிரஸ், வளர்ச்சி என்று ஓவராக அலைவதால் தான் நம் நாட்டில் அம்பானி, டாட்டா ராஜ்யம் நடக்கிறது. வேண்டுமா?

ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க(பெருமூச்சு), இவையே ஆரோகியமான வழிகாட்டிகள். அமெரிக்க தவறும் செய்கிறது, அதனை அதுவே தட்டியும் கேட்கிறது. சீனாவில் முடியுமா?

சதுக்க பூதம் said...

வாங்க கையேடு ,Varun .

வருன் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

நான் சீனாவின் பாதையை முழுமையாக பின் பற்ற வேண்டும் என்று கூறவில்லை.
இந்தியா மற்றும் சீனா - இரண்டுமே அறிவியல் ஆராய்ச்சியில் கிட்ட திட்ட ஒரே நிலையில் உள்ளது. இந்திய ஆராய்ச்சிக்கும் மேலை நாடுகளின் ஆராய்ச்சிக்கும் சுமார் 40 வருட இடைவெளி உள்ளது. என்வே ஆராய்ச்சியில் சம நிலை வர வேண்டுமானால் தற்போது நடக்கும் ஆராய்ச்சியில் உள்ள வல்லுனர்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது பல்கலை கழகங்களில் மேல் நிலையில் ஆராய்ச்சியாளர்களாக உள்ளவர்களிள் பெரும்பாலோனோர்(இதற்கு விதி விலக்கு இருந்தாலும்) 40 வருட பிந்தைய ஆராய்ச்சி நிலையில் உள்ளதால் அடுத்த தலைமுறையினரையும் பின்னோக்கியே இழுக்கின்றனர்.

பல்கலைகழகங்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுத்து ஆராய்ச்சி பிராஜெக்ட்களுக்கு ஏற்றவாறு இன்சென்டிவ் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

Unknown said...

சம்பளம் கம்மியாக கொடுத்து ப்ராஜெக்ட் செய்வோருக்கு இன்செண்டிவே கொடுத்தால், நம் ஆட்கள் மருபடிஉம் லஞ்சத்திற்கு தான் போவார்கள்.

"எனக்கு seniority உள்ளது, ஆனால் சம்பளம் உயர்வு இல்லை, இது அநியாயம்" என்று தான் கூறுவார்கள். ஆராய்ச்சி செய்யாமல் vice-chancellor, registrar, controller போன்ற பதிவிகளுக்கு குறி வைப்பார்கள். லோன் வாங்கி லஞ்சம் கொடுக்கும் கேவலம் நம் நாட்டின் தனி தன்மை.

சோசியல் பிரஷர் உருவாக்க வேணும். டாக்டர் ஆபரேஷன் செய்து நோயாளி இறந்தால் மதிப்பு குறையும் தானே? அது போல, ஆசிரியர் regularaga "research paper" அல்லது "field consultancy" செய்ய வில்லை என்றால், நம் மதிப்பு குறையும் என்ற எண்ணம் வர வேண்டும். Publish or Perish.

பணம் சம்பாதிக்க நிறைய வழி உள்ளது. மரியாதையை சம்பாதிக்க ஒரு வழி தான் இருக்கும். மரியாதையை பணதிர்ற்கு மேலாக உயர்த்த வேண்டும்.

வெங்கி போன்றோர் நோபெல் பரிசு வாங்கினால், நாம் ஓவராக கொண்டாட தேவையில்லை. "இந்தியால தான படிச்சாரு" என்று தம்பட்டம் அடிக்க வேண்டம்.

கண்ணனுக்கு தெரியாமல், "இந்தியாவில் தான் என் கதி" என்று வெளி நாடு வாய்ப்புகளை விட்டு இங்கயே உழல்பவர்களை கண்டுபிடித்து நம் சமூகத்தில்
பாராட்டுவோம்.

ஆதலால் என் கருத்து என்ன வென்றால், பணத்தை போன்ற tangible benefitsஐ விட, intagible benefits ஐ உருவாக்குவோம்.

(P.S. Something i recalled regarding your old post about megacorporations. I think the British East India Company could be called Megacorp, don't you think?)

சதுக்க பூதம் said...

//ஆதலால் என் கருத்து என்ன வென்றால், பணத்தை போன்ற tangible benefitsஐ விட, intagible benefits ஐ உருவாக்குவோம்.
//
சரியாக சொன்னீர்கள். ஆனால் அது நடைமுறைபடுத்துவது தான் சிரமம்.

//கண்ணனுக்கு தெரியாமல், "இந்தியாவில் தான் என் கதி" என்று வெளி நாடு வாய்ப்புகளை விட்டு இங்கயே உழல்பவர்களை கண்டுபிடித்து நம் சமூகத்தில்
பாராட்டுவோம்.
//
good one.

//Something i recalled regarding your old post about megacorporations. I think the British East India Company could be called Megacorp, don't you think?//

பொருளாதார ஆய்வாளர்கள் கூட கிழக்கிந்திய கம்பெனியை தான் முதல் பெரிய அளவிளான பன்னாட்டு கம்பெனி என்பார்கள். தற்போதைய பன்னாட்டு கம்பெனிகளுக்கு எல்லாம் முன் மாதிரி எனலாம்