Sunday, October 11, 2009

அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 2



அமைதியாக நடக்கும் ஒரு சமுதாய புரட்சி - 1


சென்ற பதிவில் தேசிய வேளாண் நிறுவனம் பற்றியும் அது விவசாய வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணிகள் பற்றியும் பார்த்தோம். இப்பதிவில் அந்நிறுவனம் வேளாண் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பிற பணிகளை பார்ப்போம்.



5.சென்னை தரமணியில் உள்ள அண்ணா பல்கலை கழக வளாகத்தில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் செயல் பட்டு வருகிறது.பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு முக்கிய பங்கை அளிப்பது மண்ணின் வளம். பயிருக்கு தேவையான சத்துக்கள் எந்த அளவு மண்ணில் உள்ளது என்பதை கண்டறிந்து மீதி தேவையான சத்துக்களை உரம் மூலம் அளிப்பதன் மூலம் மகசூலை பெருக்க முடியும். இந்த மண் பரிசோதனையை துள்ளியமாக செய்ய மண் பரிசோதனை மையத்தை இங்கு அமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உயர் பரிசோதனை கூடங்களில் பயன் படுத்தும் முறையை இந்தியாவிலும் கையாண்டு துள்ளிய மண் பரிசோதனை செய்கிறார்கள். தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற நுண்ணூட்ட சத்துக்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்த பரிசோதனையின் முடிவுகளை வேளாண் வல்லுநர்கள் ஆராய்ந்து பயிர்களுக்கு தேவையான சத்துக்களை சரியான அளவு, சரியான நேரத்தில், சரியான முறைப்படி இட பரிந்துரை செய்கிறார்கள்.

6.மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்ய படும் உணவு பொருட்களின் தர கட்டு பாடு மற்றும் அவ்வுணவு பொருட்களில் இருக்கும் சத்துக்களின் அளவை பட்டியலிடுவது போன்றவை அப்பொருட்களை சந்தை படுத்துவதற்கு மிகவும் அவசியமானவை ஆகும். இந்த ஆராய்ச்சி மையத்தில் இதற்கான வசதியும் உள்ளது.

7.உயிர் தொழில்நுட்பம் மூலம் நோய் தாக்குதல் குறைந்த அதிக மகசூல் கொடுக்க கூடிய செடிகளை உற்பத்தி செய்யவும் இங்கு ஆராய்ச்சி நடைபெருகிறது.

8.தற்போது வேளாண் கூலி தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பை தேடி நகர் புறங்களுக்கு சென்று விட்டதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே விவசாயத்தை தொடர்ந்து நடத்த பண்ணை உபகரணங்களின் தேவை முக்கியமாக உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாட்டு நிலவரத்திற்கு ஏற்ற பண்ணை உபகரணங்களை கண்டறிந்து அவற்றை விவசாயிகளுக்கு விளக்கி அவர்கள் உபயோகபடுத்த ஊக்குவிக்கிறது.வெளிநாட்டிலிருந்து கூட நமக்கு தேவையான உபகரணங்களை தருவித்து இங்கு உபயோகபடுத்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள்.







9.இந்திய விவசாயத்தில் தற்போது முக்கிய பிரச்சனையாயிருப்பது தண்ணீர் தான். அவ்வப்போது அதிகம் பெய்யும் மழை நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் விவசாயத்திற்கு உபயோக படுத்துவது அவசியம். தேசிய வேளாண் நிறுவனம், நாபார்டு வங்கியுடன் இணைந்து கிராம அளவில் நீர் சேமிப்பு கலங்களை அமைத்து, வாய்க்கல்களை சுத்த படுத்தி அதை அந்த கிராம மக்களே நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன் பயனை பல கிராம விவசாயிகள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.



10.மாடு வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு மற்ரொரு லாபம் தரும் தொழிலாக உள்ளது. மிகவும் தரம் வாய்ந்த வெளி நாட்டு மாடுகளின் விந்துக்களை உபயோகபடுத்தி உள் நாட்டு மாடுகளுடன் கலப்பு ஏற்படுத்தி அதிக பால் உற்பத்தி மற்றும் நோய் ஏதிர்த்து வளர கூடிய மாடுகளை விவசாயிகள் பெற உதவி செய்கிறது.

11.விவசாயிகளை தொழில் நிறுவனங்களோடு நேரடி தொடர்பை ஏற்படுத்தி, உற்பத்தியின் லாபம் இடை தரகர்களுக்கு கிடைக்காமல் விவசாயிகளுக்கு கிடைக்க உதவி செய்கிறது. உதாரணமாக பால் உற்பத்தி, love birds பறவை வளர்ப்பு மற்றும் பலவற்றில் இது போல் உதவி செய்கிறது.

12.விவசாயிகளுக்கு வங்கியில் கடன் வாங்க தானே முன்னின்று உதவி செய்து அந்த கடனில் தொடங்கும் வேளாண் தொழிலுக்கும் இறுதி வரை தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

அடுத்த பதிவில் பிற பணிகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்

--

4 comments:

Thomas Ruban said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை நன்றி சார்.

சதுக்க பூதம் said...

மிக்க நன்றி Thomas Ruban .விரைவில் இந்நிறுவனத்தை பற்றி அடுத்த பதிவிடுகிறேன்

seeprabagaran said...

நம் நாட்டின் இயற்கைவளங்களும் மனிதவளங்களும் சுரண்டப்படாமலும் அன்னியர்களால் கொள்ளையடிக்கப்படாமலும் நாடு சீரான வளர்ச்சியை அடையவேண்டும் என்றால் இயற்கை சார்ந்த “காந்திய பொருளாதாரக் கொள்கையே” நமக்கு ஏற்றதாகும்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் கொழுக்கவே நமது அரசு திட்டங்களைத் தீட்டி நாட்டை அன்னியர்களிம் விற்றுவருகிறது.

இந்நிலையில் தங்கள் பதிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சூனாம்பேடு சென்று திட்டங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன்.

சதுக்க பூதம் said...

வாங்க பிரபாகரன்.nationalagro@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது என்ற
National Agro Foundation
Research & Development Centre,
Anna University Taramani Campus, Taramani,
Chennai - 600 113
Tamil Nadu , India

முகவரியில் சென்னை அலுவலகம் உள்ளது. அங்கு போய் பாருங்கள்