Friday, January 09, 2009

IT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கொண்டு IT நிறுவனங்களை தங்களது மாநிலத்தில் தொடங்க வைக்க முயற்ச்சி செய்வது அனைவரும் அறிந்ததே. தொழில் துறை வளர்ச்சியை ஒதுக்கி வந்த மேற்கு வங்காளம் போன்ற பிற்பட்ட மாநிலங்கள் கூட தற்போது IT நிறுவங்களை தங்கள் மாநிலத்தில் இழுக்க முயற்ச்சி செய்து வருகிறது.ஆனால் ஒரே ஒரு மாநிலம் மட்டும் தன் மாநிலத்தில் கம்பெனிகளை தொடங்க வருபவர்களை, இங்கு தொடங்க கூடாது என்று அறிவுறித்தி திரும்பி அனுப்ப முயற்ச்சி செய்கிறது. அந்த மாநிலம் தமிழகம்
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

இனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க
அனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்
இல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்
அறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்
இருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா? அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்
பொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.

தற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.

தமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்
பாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.

தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்


--

4 comments:

Anonymous said...

//உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும்
துறையாக IT துறை உள்ளது//

do you know any reality on this???

சதுக்க பூதம் said...

//do you know any reality on this???//

என்னிடம் அதற்கு சரியான புள்ளி விவரம் இல்லை. ஆனால், நான் கல்லூரி படித்து முடித்த போது எல்லாம்(1990's) வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும்.ஆனால் தற்போது கல்லூரி முடிப்பவர்களுக்கு எல்லாம் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷ்யமாக இல்லை(உறவினர்கள் அனுபவத்தில் தெரிந்தது). முன்பு கிராமங்களில் கூலி வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கும். பலருக்கு எப்போதும் வேலை கிடைக்காது. ஆனால் இப்போது பெரும்பாலானவர்களுக்கு நகரத்தில் வேலை கிடைத்து, கிராமத்தில் இப்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே அறிதாக உள்ளது

Arun said...

Hi,
According to me what minister said it is correct. Even though i am working in IT industry. Minister said since it is down turn for IT industry why don't you look for textile and auto industry ? These industries will help many un-educate peoples and it is good for our own economy. Also minister said 50% of office space vacant in OMR. Do you know about that ?

சதுக்க பூதம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண். நான் உங்கள் கருத்திலிருந்து சிறிது மாறுபடுகிறேன்.


//since it is down turn for IT industry why don't you look for textile and auto industry ?//

நீங்கள் ஒரு செய்தியை மனதில் வைக்க வேண்டும். அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஓரளவு நல்ல நிலையில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.பெரும்பாலானவர்கள் தொழிலதிபர்கள். தான் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் தொழில் தொடங்குபவர்களே அன்றி, அரசு அல்ல. மேலும் ஒருவர் ஒரு IT கம்பெனி ஆரம்பிப்பதில் முதலீடு செய்ய போகிறார் என்றால் அதில் உள்ள Risk ஆராய்ந்து ,முன்பே client பிடித்து பின்பு தான் ஆரம்பிப்பார். அவர் இதே அறிவுரையை பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு எந்த கல்லூரியில் சேரலாம் என்று அறிவுரையாக கொடுத்தால் சிறிதாவது பொருத்தமாயிருக்கும். மேலும் எந்த தொழிலில் பிற்கால வளர்ச்சி உள்ளது என்று ஆராய்ந்து சொல்லும் மெக்கின்ஸி கன்சல்டன்சி போன்ற அராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய வில்லை அவர்.அங்கு வந்தவர்களும் அவரை விட சர்வ தேச பொருளாதாரம் மற்றும் தொழில் துறையை பற்றி நன்கு அறிந்தவர்கள்.
னான் முக்கியமாக கண்டிக்க விரும்புவது அவர் கூறிய கீழ் காணும் செய்தியை தான்


//Tamil Nadu, the country's third largest IT services exporter, on Friday said it no longer needed investments in the sector //

தமிழகத்தில் IT கம்பெனியே தொடங்க கூடாது என்பது போல் கூறியுள்ளார். தமிழகத்தில் லட்ச கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பதே IT துறையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

//since it is down turn for IT industry why don't you look for textile and auto industry ?//

உண்மையில் பார்த்தால் IT துறையை விட textile மற்றும் automobile உற்பத்தி தொழில் தான் மிக அதிகமாக பாதித்துள்ளது. இத்துறைகளில் பல்லாயிரகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். இத்துறை மிக வேகமாக நலிந்து வருவதால் மத்திய அரசு பல்லாயிரம் கோடி மானியமாக கொடுக்கிறது. உலக பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிப்படைந்த தொழில் இவைதான். ஆனால் இவற்றில் வேலை இழந்து பாதிப்படைவது ஏழை மக்கள் என்பதால் பத்திரிக்கைகள் அதிகம் முக்கியத்துவம் தருவதில்லை.

It IS NOT DOWNTURN FOR IT INDUSTRY
ALONE. It IS DOWNTURN FOR ALL INDUSTRIES WHICH EXPECTS EXPORTS.IT IS SOMEWHAT IN GOOD SHAPE COMPARED TO OTHERS.

IF SOMEBODY HAS STRONG CLIENT BASE IN ANY OF THE INDUSTRY, HE WILL SURVIVE.IT SEPENDS ON PERSON WHO START THE INDUSTRY RATHER THAN TYPE OF INDUSTRY.

//These industries will help many un-educate peoples and it is good for our own economy.//


இதில் என்க்கு உடன்பாடே. நானும் அது பற்றி இப்பதிவில் தெளிவாக கூறியுள்ளேன்.

//அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.//

அமைச்சருக்கு textile மற்றும் automobile industryயை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்றால் அத்துறை தொடங்க தமிழக அரசு கொடுக்கும் அதரவு பற்றி விளக்களாம். அவர்களுக்கு முக்கிய தேவையான மின் உற்பத்தியை எவ்வாறு "தங்கு தடையின்றி" தமிழக அரசு கொடுக்கிறது என்று விளக்கலாம். அத்துறைக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை விளக்களாம்.அதை விட்டு விட்டு தமிழகத்தில் IT தொழிலே தொடங்க கூடாது என்று சொல்வது அபத்தமாக உள்ளது.


//50% of office space vacant in OMR//
அமைச்சர் 50% இடம் காலியாக உள்ளது என்று கூறவில்லை. 50% மக்கள் IT துறையில் வேலை இழந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.IT துறையில் வேலை செய்யும் உஙளுக்கே தெரிந்திருக்கும்,50% மக்கள் வேலை இழந்துள்ளனரா என்று ?
அமைச்சர் சொன்னது==
//over 50 per cent of software companies... (in the city's IT corridor) have closed down after the incident."
//