திருக்குறலில் உள்ள அதிகாரங்களில் ஒன்று ஊழ். ஊழ் என்பது ஆசீவர்களின் நியதிக்கொள்கையை அடிப்படையாக கொண்டது. நியதிக்கொள்கையின் படி செயல்கள் நிகழும் முன்னரே அவை அவ்விதம் நடக்கும் என்று முன்னரே நிர்ணயிக்கும் ஆற்றல் ஒன்று உண்டு. அவ்வாற்றலே நியதி என்று நம்பினர். இந்த ஆற்ரலை யாரும் கட்டுபடுத்த முடியாது. இந்த போக்கை யாரும் மாற்ற முடியாது. இந்திய தத்துவ இயலிலேயே இந்த ஊழ் என்ற நியதி கோட்பாட்டை கட்டுருவாக்கம் செயத மதம் ஆசீவகம் ஒன்றுதான். வட நூல்கள் முறையாக வரும் இயல்பினை நியதி என்று அழைப்பதை தமிழ் நூல்கள் ஊழ் என்று அழைக்கின்றனர். உலகில் இவ்விதம் எல்லாவற்றையும் நடத்தி செல்லும் ஆற்றல் தெய்வம். தெய்வம் , ஊழ் என்ற இரு சொற்களும் ஒரே பொருளையே பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன..
திருவள்ளுவர் ஊழ் அதிகாரம் முழுவதும் இதையே விளக்குகிறார். உதாரணமாக
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
பொருள் - ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!
இவ்வாறு ஊழின் வலிமையை கூறும் திருவள்ளுவர், ஆள்வினை உடைமை அதிகாரத்தில்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்று கூறுகிறார். அதாவது " ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.திருக்குறலில் உள்ள பல முரண்பாடு செய்திகளில் இதுவும் ஒன்று.
Amazon Primeல் உள்ள *The Adjustment Bureau* என்ற படத்தை பார்த்தபோது, மேற்கூறிய அனைத்து பொருட்களுக்கும் தொடர்புடைய படம் என்று தோன்றியது