பொதுவாக கண்ணகியை பிற்போக்குவாதியாக பார்க்கும் எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இதற்கு மாற்று கருத்தாக பல இடங்கள் உள்ளது.அவற்றில் ஒன்று இதோ. கோவலன் மாதவியிடம் சென்ற பின் கண்ணகி தனியே வருந்துகிறாள். இது போன்ற இழப்பு/வருத்தம் நிறைந்த காலங்களில் பரிகாரம் என்ர பெயரில் பூஜையோ அல்லது சிறு தானமோ கொடுத்தால் பிரச்சனை விலகும் என்று யாரவது கூறினால் , அவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட செய்து பார்த்தால் என்ன தான் என்று நினைபார்கள்.
அதே போல் தேவந்தி என்னும் கண்ணகியின் பிராமண தோழி, கண்ணகியிடம் சூரிய, சந்திர துறைகளில் மூழ்கி, காமத்தேவன் கொவிலுக்கு சென்று வழிபட்டால் உன் கணவன் திரும்பி வருவார் கூறி பரிகாரம் கூறுகிறாள்.
ஆனால் கண்ணகி தெளிவாக "அது எனக்கு பீடு அன்று" என்று கூறி தெளிவாக மறுத்து விடுகிறாள்.அந்த காலம் முதலே இது போன்ற பரிகார சடங்குகளும், அதை மறுக்கும் தெளிவான மனநிலை உடையவர்கள் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர். அதைத்தான் இளங்கோ அடிகள் தெளிவாக காட்டுகிறார்.
தகவல் - பேரா.கண்ணபிரான் இரவிசங்கர்
பாடல்:
கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள
சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்
ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்
பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய