Sunday, November 28, 2021

பட்டாம்பூச்சியின் பயணம்

 பட்டாம்பூச்சியின் பயணம்

அமெரிக்காவின் வட பகுதி மற்றும் கனடா நாட்டில் உள்ள  Monarch  பட்டாம் பூச்சுகள் கடுங்குளிரிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பெருமளவில் கலிபோர்னியா மற்றும் மெக்சிகோ நாடுகளை நோக்கி பயணிக்கின்றன.  முன்பெல்லாம் மில்லியன் கணக்கில்  கலிபோர்னியாவில் தென்பட்ட இந்த பட்டாம் பூச்சுகள் சிறிது சிறிதாக குறைந்து சென்ற ஆண்டு விரல் விட்டு எண்ண தகுந்த அளவிலே பயணித்திருந்தன். ஆனால் இந்த ஆண்டு பல்லாயிரம்  வண்ணத்து பூச்சுகள்  கலிபோர்னியா வந்துள்ளன. 

பறவைகள் வலசை போவது போல் ஒவ்வொரு ஆண்டும் இனபெருக்கத்திற்காக செய்யபடும் பயணம் அல்ல. Monarch வண்னத்துப்பூச்சியின் வாழ்நாள் ஓரிரு மாதம் தான். ஆனால்  குளிர் காலத்தில் இடம் பெயரும் வண்னத்துப்பூச்சு 6 மாதம் வரை உயிர்வாழும். 

ஒவ்வொரு ஆண்டும்  கலிபோர்னியாவின் கடற்கரைக்கு பயணம் செய்யும் வண்ணத்துப்பூச்சிகள் அதன் வாழ் வாழ்நாளில் இதற்கு முன்னர் இந்த பயணத்தை செய்திருக்காது. இருந்தாலும்  கலிபோர்னியாவின் கடற்கரை பகுதியில் உள்ள Pismo Beach, Pacific Grove  , Natural Bridges Beaches மற்றும் பல இடங்களுக்கு சரியாக ஒவ்வொரு ஆண்டும் வருகிறது.


















இந்த பட்டாம்பூச்சுகளுக்கு பாதையை கற்று கொடுத்தது யார்?  என்பது இன்னும் விடு படாத புதிராகவே உள்ளது. சூரிய ஒளி, இந்த பட்டாம்பூச்சி பயணத்தில் வெளிவிடும் ஏதேனும் வாசனை பொருட்கள் அல்லது ஜீனிலேயே ஆற்றல் எதாவது இருக்களாம் என்று கருதுகின்றனர்.

Location: Pacific Grove (Nar Monterey Bay )

https://www.facebook.com/sundarapandian.sabapathy/posts/10223245308312388

Sunday, April 04, 2021

கண்ணகியின் பகுத்தறிவு

 பொதுவாக கண்ணகியை பிற்போக்குவாதியாக பார்க்கும் எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இதற்கு மாற்று கருத்தாக பல இடங்கள் உள்ளது.அவற்றில் ஒன்று இதோ.  கோவலன்  மாதவியிடம் சென்ற பின் கண்ணகி தனியே வருந்துகிறாள். இது போன்ற இழப்பு/வருத்தம் நிறைந்த காலங்களில் பரிகாரம் என்ர பெயரில் பூஜையோ அல்லது  சிறு தானமோ கொடுத்தால்  பிரச்சனை  விலகும் என்று யாரவது கூறினால் , அவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட செய்து பார்த்தால் என்ன தான் என்று நினைபார்கள்.


அதே போல் தேவந்தி என்னும் கண்ணகியின் பிராமண தோழி, கண்ணகியிடம் சூரிய, சந்திர துறைகளில் மூழ்கி, காமத்தேவன் கொவிலுக்கு சென்று  வழிபட்டால் உன் கணவன் திரும்பி வருவார் கூறி பரிகாரம் கூறுகிறாள்.


ஆனால் கண்ணகி தெளிவாக "அது எனக்கு பீடு அன்று" என்று கூறி தெளிவாக மறுத்து விடுகிறாள்.அந்த காலம் முதலே இது போன்ற பரிகார சடங்குகளும், அதை மறுக்கும்  தெளிவான மனநிலை உடையவர்கள் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர். அதைத்தான் இளங்கோ  அடிகள்  தெளிவாக காட்டுகிறார்.


தகவல் - பேரா.கண்ணபிரான் இரவிசங்கர்


பாடல்:

கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்

கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்

மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள

சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்

காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவ ருலகத்துத் தையலார்

போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்

ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்

பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய



Monday, March 01, 2021

வெட்டிவேலை

அன்றாடம் பேசும் போது நமது சொல்லாடலில் அடிக்கடி பயன்படுத்துவது வெட்டிவேலை.  சோழர்கள் கால கல்வெட்டுகளில் அவர்களது வரி வகைகள் பற்றி படிக்கும் போது அதற்கானஅடிப்படை அங்கிருந்து வந்திருக்குமோ என்று எண்ன தோன்றுகிறது. சோழர்கள் காலத்தில் வெட்டி வரி என்று ஒரு வரி இருந்திருக்கிறது. எந்த ஒரு ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு அல்லது ஊருக்கு செய்யும் ஊழியமே வெட்டி எனப்படுவதாகும். ஊழியமாக தரபட்டாலும் இதை வரி இனாமாக எடுத்து கொள்ளபடுவதே முறை. நீர் கிடைக்காத காலங்களில் ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி ஊற்று நீரை தேக்கி செய்யும் ஊழியத்தை செய்நீர் வெட்டி என்று குறித்தனர். வெள்ளாமை சார்ந்த பணிகளுக்கு செய்யும் வேலைகளை வெள்ளான் வெட்டி என்று கூறுகின்றனர். குடும்பத்தக்கு ஒருவர் கோடை காலங்களில் நீர் பாசன வேலைகளை செய்வதை சுமா 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கூட கிராமத்தில் பார்த்திருக்கிறேன். வேலை செல்ல ஆள் அனுப்பாதவர்கள் அதற்குன்டான பணத்தை செலுத்த வேண்டும்.


எனவே நீங்கள் ஊதியம் பெறாமல் செய்யும் பொது காரியங்கள் அனைத்தையும் வெட்டி வேலை என்று கூறலாம்.

தமிழக தொல்லியல் துறைக்கு மிக்க நன்றி.  அவர்கள் அனைத்து தொல்லியல் கல்வெட்டுகள் சார்ந்த புத்தகம் மற்றும் அனைத்து வெளியீடுகளையும் இலவசமாக இணையத்தில் கொடுத்துள்ளார்கள்.  அதன் மூலம் பல வரலாற்று செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.   https://www.tnarch.gov.in/e-publication-books