Sunday, November 24, 2019

MultiTier cropping reference in சீவக சிந்தாமணி

 தற்போதைய விவசாய தொழில் நுட்பத்தில் பயிர்களின் திண்மத்தை (Crop Intensity) அதிகரிக்க Multi-Tier Cropping என்னும் தொழிற்நுட்பத்தை கடைபிடிக்க பரிந்துரைக்கிறார்கள்.  Multi-Tier Cropping என்பது வெவ்வேறு உயரமுடைய மற்றும் மாறுபடும் தன்மை வாய்ந்த பயிர்களை அடுக்காக வளர்ப்பது ஆகும் முக்கியமாக மலை பகுதிகளில் அரிதாக கிடைக்கும் சூரிய ஒளியை முறையாக அறுவடை செய்து   குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும். சூரிய ஒளி மட்டுமில்லாமல், மண் வளம் காக்கவும், களை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது. நவீன அறிவியலில் வேரில் வளரும் மைக்கோரைசா பூஞ்சானம் போன்றவை மாறுபட்ட பயிர்களிடையே உணவுப்பொருள் பரிமாற்றத்திற்கும் உதவுவதாக நிருபிக்க பட்டுள்ளது.

இந்த பற்றிய குறிப்பு 1500 ஆண்டுகளுக்கு முன்  எழுதப்பட்ட சீவக சிந்தாமணியில் உள்ளது. ஏமாங்கத நாட்டின் வளம் பற்றி கூறும் போது

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையாற்றிசை போய துண்டே.

இந்த பாடலில் உயரே மூதல் தளத்தில்  தென்னையும் , அதை தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களில் பாக்கு, பலா, மா, வாழை என அடுத்தடுத்த பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதற்கு நடுவே தேனி வளர்ப்பும் (Apiculture) உள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க பட வேண்டியது பலாவுக்கும், மாங்கனிக்கும் மகரந்த சேர்க்கை நடைபெற தேனிக்கள் இன்றியமையாதது. விவசாய தொழிற்நுட்பத்தில் இந்த முதிர்ச்சியை தமிழர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றனர் என்பதை தான் இந்த செய்யுள் விளக்குகிறது.

 (இ - ள்.) காய்மாண்ட தெங்கின் பழம்வீழ - நன்றாகக் காய்த்த தென்னைநெற்று வீழ ; கமுகின் நெற்றிப்பூ மாண்ட தீந்தேன் தொடை கீறி - கமுகின் உச்சியிற் பொலிவிற் சிறந்த இனிய தேன்போல இனிய நீரையுடைய குலையைக் கீறி; வருக்கை போழ்ந்து - பலாப் பழங்களைப் பிளந்து; தேமாங்கனி சிதறி - தேமாவின் பழங்களைச் சிதறி; வாழைப்பழங்கள் சிந்தும் - வாழைப் பழங்களைச் சிதறும்; ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டு - ஏமாங்கதம் என்று பெயர் கூறப்பட்டு இசையாலே திசையெல்லாம் பரவியதாகிய ஒரு நாடு உண்டு.
#TamilCivilization