ஒவ்வொரு வருடமும் கோடையின் கத்தரி வெய்யில் அதிகரிக்கிறதோ என்னவோ? மின் வெட்டு அதைவிட அதிக அளவில் அதிகரிக்கிறது. கோடை காலம் வந்தாலே ஏன் மின்வெட்டு வருகிறது என்றால், அணைகளில் நீர் இல்லாததால் நீர் மின்சாரமும், காற்று வேகம் குறைவாக உள்ளதால் காற்று மின்சாரமும் கிடைக்காதது தான் என்கிறார்கள். என்னடா இது இந்த சூரிய பகவானுக்கு கருணையே இல்லையே? என்று எண்ண தோன்றும். ஆனால் உலகெங்கும் சூரிய ஒளி மூலம் பல்லாயிரம் வாட்டுகள் மின்சாரம் எடுக்கும் போது கோடை வெப்பத்தை கண்டு மின்வெட்டுக்கு வருத்த படவேண்டுமா என்று தோன்றும்.
அமெரிக்காவில் Solar Power
அமெரிக்காவில் வீட்டு கூறைகளில் சோலார் பேனல் வைத்து வீடுகளில் மின்சாரம் தயாரிக்கின்றனர். காலை மற்றும் இரவு வேலைகளில் வீடுகளுக்கு அதிக மின்சாரம் தேவைபடும். ஆனால் சூரிய ஒலி மூலம் கிடைக்கும் மின்சாரமோ பகல் நெரங்களில் அதிகம் கிடைக்கும். பகலில் வீடுகளுக்கு மின் உபயோகமும் குறைவு. ஆனால் தொழிற்சாலை மற்றும் அலுவலங்களுக்கு பகலில் அதிக மின்சாரம் தேவை. இந்த பிரச்சனையை சரி செய்ய வீடுகளில் விஷேச மோட்டார் பொருத்த படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சார கிரிடுகளிலிருந்து மின்சாரத்தை பெரும் போது வீட்டின் மின்சார உபயோகத்துக்கு ஏற்ப மீட்டர் ஒரு திசையில் சுழலும். பகல் நேரங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிகம் தயாரிக்கும் போது, அந்த மின்சாரத்தை மின் பகிர்மாண நிறுவனம் பெற்று கொள்ளும். அப்போது மீட்டர் எதிர்புறம் சுழலும். மின்சார உபயோகத்தை விட உற்பத்தி அதிகமாக இருந்தால் அதற்குறிய பணத்தை கொடுத்து விடுவார்கள்.
ஆரம்பத்தில் இந்த சோலார் பேனலை நிறுவும் பணம் தான் அதிகம். ஆனால் ஒருமுறை செலவு செய்து விட்டால் ஒவ்வொரு வருடமும் அது உற்பத்தி செய்யும் மின்சாரம் மிக பெரிய வீட்டின் முழு தேவையையும் சரி செய்வதோடு கொஞசம் வருமானம் கூட வர வழி செய்யும்.ஒரு சில தனியார் நிறுவனங்கள் முழுமையான கட்டுமான செலவை தாங்களே ஏற்று கொண்டு மின்சாரத்திற்கான பணத்தை வசூலிக்கின்றன. வருடத்தில் பாதி நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் அமெரிக்காவிலேயே இப்படி என்றால் இந்தியாவின் நிலையை நினைத்து பாருங்கள்.
மோடியின் டெஸ்லா விஜயம்
பாரத பிரதமர் மோடி சமீபத்தில் சிலிக்கன் வாலிக்கு விஜயம் செய்த போது டெஸ்லா நிறுவனத்திற்கு வருகை தந்தது நினைவிருக்களாம். டெஸ்லா நிறுவனம் உலகிலேயே அதிக தரம் மற்றும் விலை கொண்ட சொகுசு மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஒரு முறை மின்சார காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால் சுமார் 370 கிமீ ஓட்டலாம்.மிக அதிக விலையுடைய டெஸ்லா மின்சார காரை கொண்டு இந்திய கட்டுமான வளர்ச்சிக்கும், அடிப்படை தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்று நினைக்களாம்.ஆனால் அவரது வருகையின் நோக்கம் டெஸ்லா நிறுவனத்தின் மற்றொரு கண்டுபிடிப்பை முன் வைத்து தான் .
Powerwall
டெஸ்லா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு மின்சாரத்தை சேமித்து வைக்க புதியவகை லித்தியம் அயான் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது. இந்த பேட்டரியை குறைந்த விலையில் நெவேடா மாகாணத்தில் தயாரிக்கிறார்கள். தற்போது புதிய Powerwall என்ற புதிய பேட்டரியை அறிமுக படுத்த உள்ளனர். சூரிய சக்தியை மின்சாரமாக்கி அதிக மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து கொள்ளும்.இந்தியாவில் அமெரிக்கா போன்ற கிரிடுகள் வைப்பதற்கு அதிக செலவு ஆவதோடு, வருடங்களும் ஆகும். ஆனால் ஒவ்வொரு விடுகளிலேயோ, கிராமங்களில் பெரிய அளவிலேயோ இந்த சோலார் பேனல் கொண்ட பேட்டரியை வைப்பதாக கொள்ளுங்கள். நாள் முழுவதும் அடிக்கும் வெயிலில் இருந்து தயாரித்த மின்சாரத்தை பாட்டரியில் சேகரித்து கொண்டு இரவிலும்,காலையிலும் உபயோகிக்க முடியும். இது இந்தியர்களின் முழு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யும்.
இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், Grid முறையிலான மின்சாரப் பரிமாற்றத்தின் தேவையில்லாமல் போகும். சூரிய ஒளி கொண்டு தூய்மையான மின்சக்தியை வீட்டுக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டு மக்கள் தங்கள் மின்சாரத் தேவையைத் தீர்த்து கொள்ள முடியும்.மின்வெட்டு தொல்லையிலிருந்தும், கொசுக்கடி தொல்லையிலிருந்தும் நிறைய மக்கள் தப்பிக்கலாம்.
கடந்த சில வருடங்களாக சூரிய ஒளி மின்சார தொழில் நுட்ப வளர்ச்சியால் உற்பத்தி செலவு குறைந்து வருவது குறிப்பிட தக்கது. வரும் காலத்தில் இந்த நிலை தொடர்ந்து Solar Panel மற்றும் பாட்டரிகள் விலை குறைந்து அனைத்து மக்களுக்கும் தூய்மையான சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் நிலை
வெகு தொலைவில் இல்லை.

No comments:
Post a Comment