Wednesday, July 23, 2014

நெல் மற்றும் கோதுமையில் Genetically Modified பயிர்களை சோதனைக்கு பயிரிட மோடி அனுமதி

மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா?? என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்து பயிர்களிலும் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் பயிரிட படுகின்றன. ஆனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள முக்கிய  நாடுகளான பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் மனிதன் உணவுக்கு பயன் படுத்தும் பயிர்களில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு மனிதனின் உடல் நலத்துக்கு தீங்கு ஏறப்டுத்த வழிவகை உள்ளது என்று தனது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை பொருத்தவரையில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர் வகைகள் உணவு பொருள் அல்லாத பருத்தி போன்ற பயிர்களில் அதிக அளவில் உபயோகிக்க படுகிறது.


நரேந்திர மோடி தலைமையிலான அரசு தற்போது நெல் மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பயிர்களில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களை விளைநிலங்களில் விளைச்சல் சோதனைக்காக பயிரிட அனுமதித்துள்ளது.இது ஊடகங்களில் கூட மிக பெரிய செய்தியாக வரவில்லை.

சென்ற காங்கிரஸ் அரசு மரபணு மாற்றம் செய்ய பட்ட கத்திரியை வெளியிட  முடிவு  போது அனைத்து ஊடகங்களிலும் அது பற்றி மிக பெரிய செய்தியாக வெளியிட பட்டு, பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை அன்னியர்களுக்கு அடிமை படுத்துவதாக கூறி மிக பெரிய போராட்டம் நடத்தி அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.அதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களை பயிரிட அதற்கான கமிட்டி ஒரு வருடம் முன்பே அனுமதி அளித்தும் ,  அதை செயல்படுத்த சுணக்கம் காட்டியது.


ஆனால் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு முக்கிய உணவு தானிய பயிர்களான நெல் மற்றும் கோதுமையில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிரக்ளுக்கான சோதனை பயிரிடலை விளைநிலங்களில் பயிரிட முடிவு செய்த போது அந்த எதிர்ப்பு குரல்கள் எல்லாம் எங்கு போயின என்று தெரியவில்லை.பாஜக சாதனைகளை பட்டியலிடும் பசு கழிவு சாத்திரம் பேசும் இந்துத்துவவாதிகள் இந்த செய்தியை "சொல்ல மறந்த செய்திகள்" வரிசையில் வைத்து விட்டார்கள்.

நான் முன்பு கூறியது போல் தனிபட்ட முறையில் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அறிவியல் மூலமாக நிருபிக்க படாத காரணங்களை கொண்டு எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. இது போன்ற தொழிற்நுட்பங்களை நடு நிலையான உணவு மற்றும் பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றால் கட்டாயம் ஏற்று கொள்ள வேண்டும்.

என்னுடைய வியப்பு எல்லாம் பத்திரிக்கை மற்றும் மரபணு மாற்ற எதிர்ப்பு இயக்கங்களின் எவ்வாறு மிதமாக மாறியது என்பது தான்.

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல....

-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-

வவ்வால் said...

பூதம்,

நல்ல தகவலை சொல்லி இருக்கீங்க.

மரபணு மாற்ற எதிர்ப்பு என்பதெ செட்டப்பு தான், இந்தியாவில் ஏற்கனவே பிடி பருத்தி நல்லா பரவிடுச்சு,சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!

அப்போதைய எதிர்ப்புகள் கூட உள்நாட்டு விதை உற்பத்தியாளர்களால் "ஆதரிக்கப்பட்டு" கிளப்பப்பட்ட போராட்டமாம், மோன்சாண்டோ உள்நாட்டு விதை உற்பத்தியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பிடி விதை தயாரிப்பில் கூட்டு சேர்க்கவும் போராட்டம் அடங்கிப்போச்சு அவ்வ்!

# //என்னுடைய வியப்பு எல்லாம் பத்திரிக்கை மற்றும் மரபணு மாற்ற எதிர்ப்பு இயக்கங்களின் எவ்வாறு மிதமாக மாறியது என்பது தான்.//

போராட்டத்துக்கு "ஸ்பான்சர்" கிடைச்சதும் ஆரம்பிப்பாங்க , அதுக்குள்ள அவசரப்படுறிங்க அவ்வ்!

அதே போல ஸ்பான்சர்ஸ் எப்போ போராட்டத்தினை நிறுத்த சொல்லுறாங்களோ அப்போ நிப்பாட்டிப்பாங்க,நம்ம ஊரு என்.ஜி.ஓ எல்லாம் தொழிலில் கெட்டி :-))

முன்னர் பிடி பருத்தி பற்றி எழுதிய பதிவுகள்,

# http://vovalpaarvai.blogspot.in/2013/10/bt-cotton.html

# http://vovalpaarvai.blogspot.in/2013/10/bt-cotton.html

# அமெரிக்காவிலும் மரபணு மாற்ற உற்பத்தியை மக்களூக்கு விற்க தடையிருக்கு, அவற்றை கால் நடை தீவனம் அல்லது சாராயம் தயாரிக்க தான்ன் பயன்ப்படுத்த அனுமதி , USDA தளத்திலேயே போட்டிருக்கே.

மேலும் மரபணு மாற்ற ஜீன்கள் பொது விவசாய சாகுபடியில் கலந்துவிட்டடாக மோன்சாண்டோ, பேயர் மீதெல்லாம் வழக்கு நடக்குது.

//The U.S. Judicial Panel on Multidistrict Litigation announced that at least 16 lawsuits will be sent to U.S. District Judge Kathryn Vratil in Kansas City for pretrial evidence gathering.
Lawsuits started to be filed in June after an Oregon farmer found wheat that would not die in his field. After the wheat was tested, it was discovered that it contained a gene that allowed it to withstand Monsanto’s herbicide glyphosate.
Monsanto had previously field tested a Roundup Ready wheat variety 15 years prior. It remains unknown how the GM variety got into the field since trials haven’t been conducted for many years after Monsanto abandoned the project after trading countries would not accept such wheat.
The GM wheat discovery this year caused multiple wheat importers to stop importing wheat from the United States for several weeks, dropping the price of U.S. wheat.//

சுட்டி:

http://www.agprofessional.com/news/GM-wheat-lawsuits-to-be-consolidated-in-Kansas-City-228392511.html

சதுக்க பூதம் said...


வாங்க ரூபன் மற்றும் வவ்வால்

//அமெரிக்காவிலும் மரபணு மாற்ற உற்பத்தியை மக்களூக்கு விற்க தடையிருக்கு, அவற்றை கால் நடை தீவனம் அல்லது சாராயம் தயாரிக்க தான்ன் பயன்ப்படுத்த அனுமதி , USDA தளத்திலேயே போட்டிருக்கே.//

அமெரிக்காவில் மரபணு மாற்ற பயிர்களில் தயாரிக்க படும் உணவுக்கு தடையில்லை. கலிபோர்னியாவில் முதல் முதலாக Prop 37 (Right To Know)என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யபட்ட உணவு பொருட்களை லேபிளில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு ஓட்டெடுப்பு நடத்தினார்கள் (அமெரிக்காவில் தேர்தலின் போது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதோடு இது போன்ற பொது பிரச்ச்னைகளுக்கு மகக்ளின் முடிவையும் கண்டறியும் வாய்ப்பு கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் உள்ளது). ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது. அதுவும் மரபணு மாற்ற உணவு பொருட்களை தடை செய்ய அல்ல. அதை லேபிளில் தெரிவிக்க வேண்டும் என்றுதான்.

Major medical groups like the World Health Organization and the American Medical Association, in addition to the American Association for the Advancement of Science note that people have been eating genetically modified foods (about 85% of corn sold in the U.S. are man-made hybrids) for nearly 20 years with no serious adverse effects.

http://www.cnn.com/2012/11/08/health/california-gm-foods/


உங்களுடைய பதிவை படித்தேன். எனக்கு மாற்று கருத்து உண்டு. அது பற்றிய விவாதம் ஆரம்பித்தால் மிக்க பெரிதாக இருக்கும் என நேரம் கருதி விவாதத்தை ஆரம்பிக்கவில்லை