Thursday, May 22, 2014

கோச்சடையான் - விமர்சனம்

கோச்சடையான்  - ஒரு வரலாற்று கதையை  Motion Capture  மற்றும்  Animation  மூலம் அழகாக கொடுக்க முயன்று இருக்கிறார்கள். பழங்காலத்தில் கலிங்கபுரம், கோட்டைய பட்டினம் என்னும் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் பகையை அடிப்படையாக கொண்ட படம். ரஜினி இப்படத்தில் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கலிங்கபுரத்தில் ஆனாதையாக வந்து தளபதியாக வளர்ந்து வெற்றி வீரனாக வலம் வந்து கோட்டையபட்டிணம் போரின் போது நடக்கும் திடீர் திருப்பத்தையும் அதை தொடர்ந்து வரும் திருப்பங்களையும் நல்ல கதையாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள்.

முழு கதையையும் சொல்ல விரும்ப வில்லை.சௌந்தர்யாவிற்கு இது நல்ல முதல் முயற்சி.படத்தில் அனிமேஷன் ஹாலிவுட் படங்களை தோற்கடிக்கும் அளவுக்கு இருந்தது என்றெல்லாம் ரொம்ப hype கொடுத்தார்கள்.Hype கொடுத்த அளவு நன்றாக இல்லை. ஓரளவு ameture தனமாகவே இருந்தது. ஆனால் மிகவும் மோசம் என்று சொல்லி விட முடியாது.தமிழ் படத்தில் இந்த அளவு முயற்சி எடுத்ததிற்கு நிச்சயம் பாரட்ட வேண்டும்.அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஸ்டைல்களை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே போகிறது. இரண்டாவது பாதி ஓரளவு பரவாயில்லாமல் வேகமாக  போகிறது. கோச்ச்டையான் வரும் flashback  பகுதி  கொஞ்சம் நன்றாக உள்ளது.

படம் முழுக்க எப்போது பார்த்தாலும் பாட்டு வந்து கொண்டே இருப்பது எரிச்ச்லை உண்டு பண்ணுகிறது. ரஜினிகாந்துக்கு இன்னும் படத்தில் ஆன்மீக தாகத்தை சேர்த்து கொள்ளும் ஆசை விடாது போலிருக்கிறது.பண்டைய கால அரண்மனை மற்றும் பிற அமைப்புகளை கொண்டு வர மிகவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள்.படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் தொழில்நுட்பத்தை பற்றியும், அனைவரின் உழைப்பு பற்றியும் அழகாக விளக்கி அந்த பின்னனியில் படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.அந்த யோசனை கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.

நாகேஷ் பாத்திரத்தை அழகாக வடிவமைத்து அவருக்கு மிக பொருத்தமாக வசனம் எழுதி அழகாக பேசவைத்திருப்பது படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. படத்தில் உண்மையான நாகேஷ் நடித்திருப்பது போலவே உள்ளது.

இந்த படத்தை பார்க்கும் போது பொன்னியின் செல்வன் கதையை இதே தொழில் நுட்பத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றியது.

அதிக எதிர்பார்ப்பில்லாமல் நிச்சயமாக ஒரு முறை பார்க்களாம்.

5 comments:

Thamaraipoo said...

Liked ur vimarsanam ...yet to see ... I really like ur thought about ponniyin selvan in this style ... :)

Thamaraipoo said...

Liked ur thought about making this kind of a movie of Ponniyin Selvan :) yet to see this movie ...

Anonymous said...

If someone is ready to give 150 crores to any youngman he would have achieved more.Just because its he and his daughter she did it. Will rajini act without getting any money for anyone else

Lakshmanan17 said...

உங்க விமரிசனத்தின் தொனியே ரொம்ப தெளிவாக - நீங்க - என்ன எளுதப்போறேன்னு- தெளிவா முடிவு எடுத்த பிற்பாடு – எளுதிய இந்த எளுத்த - விமரிசனம்னு சொன்னா - அது சுத்தமா வெளங்காமப் போயிரும். சவுந்தரியா யாரு? தனது சரக்கை விற்பனை செய்ய வந்த ஒரு பெண் - அவிய்ங்க மொத முயற்சி மூணாம் முயற்சி என அயற்சி ஏற்படுத்துற சொல்லாடல் இதை விமரிசனம் என்ற தகுதியில இருந்து வெளியேற்றுகி றது. இதே இஸ்டைல்ல பொன்னியின் செல்வன்னு சொன்னா உங்களுக்கு பொ.செல்வன் மேலே / கல்கி மேலே இருக்கிற உண்மையான் அனுமானம் கரிசனம் மிகத்தெளிவாத் தெரியுது. உங்க தலைவர் - ரஙகராசன் என்ன எளுதியிருப் பாருன்ற ஒரு மனவோட்டம் ஒருவாட்டி ஓடியிருந்தா இப்படி எளுதியிருக்க மாட்டீங்க. அந்த நூறு கோடியோ சொச்சமோ அதைக்காப் பாத்த உங்களுக்கிருக்கிற ஜாக்கிரதை உணர்ச்சி என்னங்கிறது புரியல. (நீ)-நீங்க – (எனக்கு வயசு எழுபது) - விமர்சனம் எளுதறதுங் கிறதாலத்தான் இதைப்படிக்கவே ஆரம்பிச்சேன். அப்படின்னா உன் எளுத்துக்கு நான் மரியாதை த்ர்றேன்னுதானே அர்த்தம். உங்க வாத்தியாரு ரொம்பவே கோபிச் சிருப்பாரு இதப்படிச்சிட்டு - நல்லவேளை முன்னாடியே பூட்டாரு. நீ - நீங்க - புரிஞ்சுக்குவீங்கன்னு நெனைக்கிறேன்.உங்களுக்கு அப்படி ஒரு கற்பூர புத்தி இருப்பது எனக்குத் தெரியும். சாதாரண சாமானியனா விமரிசனத்தில இருக்காதீய்ங்க. விமரிசனம்னாவே சூடான அம்பு - தேவையிருந்தா வரும்னு தெரிய வையுங்க - அவதார் பாத்து நான் விட்ட கண்ணீர் பலவற்றுக்காக - இந்த ட்ரெய்லர மட்டுமே பாத்துட்டு இது ஒரு மூணாந்தர கார்ட்டூன்னு முகம் சுளித்தவன் நான். தமிழனுங்க எல்லோரும் சேர்ந்து - ஆயிரம் கோடி என்ன ஐயாயிரம் கோடியைக் கொட்டிகொடுத்தாக்கூட எனக்கு கவலையில்லை - என் மனதிலிருந்து ரஜினிகாந்த் இன்னும் விலகித்தான் போவார். தமிளனைக் காயப்படுத்த வந்த கூட்டத்தில் இன்னும் சற்று – பெத்த பேரெடுத்த ஆளுங்க கூட்டத்தில முன்னாடி போய் நிற்பார் அவ்வளவே. இவர் இவருடைய குடும்ப உறுப்பினரின் பேராசை – மாய்மாலம் இந்த ஓர் ஆளைவெச்சு பாளாய்ப்போன தமிளனை என்னவெல்லாம் செஞ்சு கல்லா கட்டலாம் என்ற எண்ண ஓட்டம் -முற்றும் அறிந்தவன் என்ற தீவிர உறுதியில் இதை நான் உனக்கு உங்களுக்கு சொல்கிறேன். - லட்சுமணன் laxmanmari@gmail.com

சாமானியன் said...

நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை.

படம் எப்படி இருந்தாலும், அனிமேசன் துறையில், தமிழின் முதல் முயற்சி என்பதற்காகவே பாராட்டலாம்.

( எனது புதிய பதிவு : முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html )

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr