கோச்சடையான் - ஒரு வரலாற்று கதையை Motion Capture மற்றும் Animation மூலம் அழகாக கொடுக்க முயன்று இருக்கிறார்கள். பழங்காலத்தில் கலிங்கபுரம், கோட்டைய பட்டினம் என்னும் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் பகையை அடிப்படையாக கொண்ட படம். ரஜினி இப்படத்தில் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கலிங்கபுரத்தில் ஆனாதையாக வந்து தளபதியாக வளர்ந்து வெற்றி வீரனாக வலம் வந்து கோட்டையபட்டிணம் போரின் போது நடக்கும் திடீர் திருப்பத்தையும் அதை தொடர்ந்து வரும் திருப்பங்களையும் நல்ல கதையாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள்.
முழு கதையையும் சொல்ல விரும்ப வில்லை.சௌந்தர்யாவிற்கு இது நல்ல முதல் முயற்சி.படத்தில் அனிமேஷன் ஹாலிவுட் படங்களை தோற்கடிக்கும் அளவுக்கு இருந்தது என்றெல்லாம் ரொம்ப hype கொடுத்தார்கள்.Hype கொடுத்த அளவு நன்றாக இல்லை. ஓரளவு ameture தனமாகவே இருந்தது. ஆனால் மிகவும் மோசம் என்று சொல்லி விட முடியாது.தமிழ் படத்தில் இந்த அளவு முயற்சி எடுத்ததிற்கு நிச்சயம் பாரட்ட வேண்டும்.அனிமேஷன் படத்தில் ரஜினியின் ஸ்டைல்களை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே போகிறது. இரண்டாவது பாதி ஓரளவு பரவாயில்லாமல் வேகமாக போகிறது. கோச்ச்டையான் வரும் flashback பகுதி கொஞ்சம் நன்றாக உள்ளது.
படம் முழுக்க எப்போது பார்த்தாலும் பாட்டு வந்து கொண்டே இருப்பது எரிச்ச்லை உண்டு பண்ணுகிறது. ரஜினிகாந்துக்கு இன்னும் படத்தில் ஆன்மீக தாகத்தை சேர்த்து கொள்ளும் ஆசை விடாது போலிருக்கிறது.பண்டைய கால அரண்மனை மற்றும் பிற அமைப்புகளை கொண்டு வர மிகவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள்.படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் தொழில்நுட்பத்தை பற்றியும், அனைவரின் உழைப்பு பற்றியும் அழகாக விளக்கி அந்த பின்னனியில் படத்தை பார்க்க வைத்துள்ளார்கள்.அந்த யோசனை கொடுத்தவரை பாராட்டியே ஆக வேண்டும்.
நாகேஷ் பாத்திரத்தை அழகாக வடிவமைத்து அவருக்கு மிக பொருத்தமாக வசனம் எழுதி அழகாக பேசவைத்திருப்பது படத்தில் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. படத்தில் உண்மையான நாகேஷ் நடித்திருப்பது போலவே உள்ளது.
இந்த படத்தை பார்க்கும் போது பொன்னியின் செல்வன் கதையை இதே தொழில் நுட்பத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றியது.
அதிக எதிர்பார்ப்பில்லாமல் நிச்சயமாக ஒரு முறை பார்க்களாம்.