Sunday, October 27, 2013

மஞசத்தூளை கேப்சூயூலில் சாப்பிடும் அமெரிக்கர்கள்!

மஞ்சளின் மருத்துவ குணத்தை இந்தியர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே கண்டறிந்து விட்டனர். தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்களில் மஞ்சள் ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. உணவோடு உட்கொள்வது மட்டும் அல்லாமல் பெண்கள் உடம்பின் மேல் பூசி குளிக்கவும் பல காலமாக பயன் படுத்துகிறார்கள்.மஞ்சள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் இலக்கியங்களிலேயே வந்துள்ளது குறிப்பிட தக்கது.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.  - நாலடியார்இன்றைய விஞ்ஞானமும் மஞ்சளுக்கு புற்று நோய், நீரழிவு நோய், மூட்டு வலி  போன்ற நோய்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மையும் , கிருமி நாசினி தன்மையும் இருப்பதாக தெரிவிக்கிறது,

சமீபத்தில் வால்மார்ட் சென்ற போது  Food Supplement பகுதியில் இருந்த ஒரு மருந்து என் கவனத்தை கவர்ந்தது. அது வேறொன்றும் இல்லை. நம்மூர் மஞ்சத்தூள் தான். மஞ்சத்தூளை 500 மில்லிகிராம் அளவு சிறு காப்சூல்களில் அடைத்து விற்கிறார்கள். தினமும் ஒரு காப்சூல் சாப்பிட வேண்டுமாம்.

லேபிலில் தவறாமல்  மஞ்சளின் உபயோகத்தை இந்தியாவில் பல காலமாக உபயோகிப்பது பற்றி தெரிவிக்கபட்டிருந்தது.சில வருடங்களுக்கு முன் மஞ்சளை காப்புரிமை பெற்று தனியுடமை கொண்டாட சிலர் முயன்றதாக குற்றசாட்டு வைக்க பட்டது. அது போல் இல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு தடையின்றி சென்றடைந்து பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே!

4 comments:

வவ்வால் said...ஹி...ஹி எனக்கு என்னமோ அமேசான் காடுகளில் இருந்து எர்வாமாடின் விளம்பரம் தான் நியாபகம் வருது அவ்வ்!

மஞ்சளில் மருத்துவத்தன்மை இருக்கு தான் ஆனால் அத சாப்பிட்டா மருந்தே தேவை இல்லைனு இல்லையே!

ஏன்னா நாம தினமும் சமையலில் 500எம்ஜிக்கு மேல மஞ்சள் பயன்ப்படுத்துறோம்...ஆனாலும் நாம ஆசுபத்ரி போய் இங்க்லீஷ் மருந்து சாப்பிடாமலா இருக்கோம்?

சதுக்க பூதம் said...

வாங்க வவ்வால்.

//மஞ்சளில் மருத்துவத்தன்மை இருக்கு தான் ஆனால் அத சாப்பிட்டா மருந்தே தேவை இல்லைனு இல்லையே!//
சரியா சொன்னீங்க.மஞ்சதூளை Food Supplement என்ற பகுதியில் வைத்துள்ளார்கள். அதாவது Food Supplementகளை சாப்பிட்டால் உடம்புக்கு பொதுவாக நல்லது என்கிறார்கள். Food Supplimentல் இருந்தால் FDAவின் பல வகையான சோதனைகளுக்கு எல்லாம் உட்பட தேவை இல்லை.வைட்டமின் A முதல Z வரை அனைத்து வைட்டமின்கள், மற்றும் பூண்டு, இஞ்சி போன்ற பலவகையான தாவர (மருந்து?) பொருட்களின் வேதி பொருளை பிரித்தெடுத்த மாத்திரை என பெரிய லிஸ்டே இங்கு Food Supplement ல் இருக்கிறது.ஏனே அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர்களுக்கு காய்,கறி,பழங்களை உண்ணுவதில்லாமல், அதிலிருந்த வேதி பொருளை ஒரு காப்சூலாக சாப்பிடுவதில் ஆர்வம் இருக்கிறது.

Suresh Kumar said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

சதுக்க பூதம் said...

Thanks for the wishes .Wishing you the same