Monday, October 03, 2011
சவுக்கு தளத்தில் காணாமல் போன பதிவு?
பல ஊழல் அரசியல்வாதிகலையும், காவல்துறை அதிகாரிகளையும் மக்களுக்கு தோலுரித்து காட்டுவதில் சவுக்கு முதலிடம் வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திரைக்கு பின் நடக்கும் பல ஊழல்களை ஆதாரத்தோடு வெளி கொண்டுவருவதில் சவுக்குக்கு நிகர் சவுக்கு தான்.
பிற்காலத்தில் நடு நிலையான அரசியல் நாளிதழை அது தொடங்கும் என்னும் நம்பிக்கை நிறையவே இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்
என்ன ஒரு கரிசனம் ?
என்ற தலைப்பில் முதல்வர் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டது பற்றி அருமையான கட்டுரை வெளியிட்டது.தி.மு.க ஆதரவு பத்திரிக்கைகள் கூட அப்படி செய்தி வெளியிடவில்லை.
அந்த பதிவின் link http://www.savukku.net/home1/1307-2011-10-01-11-42-00.html
(facebookல் பகிர்ந்தவர்களில் நானும் ஒருவன்)
தற்போது அந்த பதிவை காணவில்லை. அது வேறு எதாவது linkல் அந்த தளத்திலேயே உள்ளதா என்று தெரியவில்லை. அது தொழில்நுட்ப பிரச்ச்னை காரணமாக காணவில்லை என்றால் பரவியில்லை.
இல்லையென்றால் அது மிகவும் வருத்தமளிக்கும் செய்திதான்
--
Subscribe to:
Posts (Atom)