Tuesday, June 21, 2011

கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைந்தது

கூகிள் மொழி பெயர்பு சேவையின் மூலம் பல மொழிகளை மொழி பெயர்பு செய்ய முடிந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சேவை என்று தமிழுக்கும் கிடைக்கும் என பல நாட்களாக நாம் எதிர்பார்த்திருந்தோம். கடைசியாக கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைக்க பட்டு விட்டது.

இனி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளையும், தமிழ் வார்த்தைகளுக்கான ஆங்கில மொழி பெயர்பையும் இங்கு சென்று பார்க்கலாம்.
http://translate.google.com/?sl=ta&tl=en#en|ta|test.

அது மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ் இணைய பக்கத்தை பிறமொழிகளுக்கும், பிற மொழி(ஆங்கிலம் உட்பட) இனைய பக்கங்களை தமிழிலும் மொழி பெயர்பு செய்து வாசிக்க முடியும்.என்னுடைய பதிவை கூகிள் சேவை மூலம் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்த போது, இது போல் மொழி பெயர்பு செய்தது.

இந்த சேவை ஆல்பா நிலையில் தான் உள்ளது. எனவே நிறைய தவறுகள் இருக்களாம்.தனி பட்ட வார்த்தைகளை மொழி பெயர்பு செய்யும் சேவை தற்போது நன்றாக உள்ளது. ஆனால் இணைய பக்கங்களை மொழி மாற்றம் செய்யும் போது நிறைய தவறுகள் உள்ளது.

இது பற்றி கூகிள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இங்குள்ளது.


இதை பார்த்தவுடன் Google Translation API கொண்டு தமிழ் மொழிபெயர்பு செய்யும் Widget செய்யலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் Translation APIல் இன்னும் தமிழுக்கு support கொடுக்கவில்லை!

--

6 comments:

vasu said...

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வசதி இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.....

vasu said...

அப்படியே உங்களிடம் எதிர்பார்த்த தொடர்களும் விரைவில் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி....

சதுக்க பூதம் said...

நிச்சயம் எழுத ஆரம்பிக்கிறேன் வாசு. வேலை பளு அதிகமாக உள்ளது.

vasu said...

நன்றி....

vasu said...

ஆமாம்... ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதை உணர்கிறேன்... அதிலும் தொடராக பதிவிடம் மிக பெரிய அளவில் உழைப்பை தரவேண்டும்...

Unknown said...

நணறி அய்யா