Tuesday, April 26, 2011

தி.மு.கவின் முதல் தேர்தல் வெற்றி! திராவிட இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு

தேர்தல் தொகுதி உடன் பாட்டின் போது காங்கிரஸ் கட்சிக்கு தகுதிக்கு மீறி பல சீட்டுகள்

தொகுதி உடன் பாடு பேச்சுவார்த்தையின் போது அடிமையை போல் கை கட்டி நின்ற தி.மு.க தலைமை.

ஆயிர கணக்கான இலங்கை தமிழர்கள் கொலை செய்ய பட்ட போது காங்கிரசுக்கு ஆதரவு.

அதற்கெல்லாம் விடை கிடைப்பது போல் தற்போது 60% பங்கு வைத்திருந்த தயாளு அம்மாளுக்கு குற்றத்திலிருந்து விடுதலை.

அதை விட காமடி, இந்த கேள்வி பதில்

செய்தியாளர்: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?

பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது.


நாட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் போது ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. ஊழலில் மாட்டினால் மட்டும் இதயம் இடிந்து விடுமா என்ன?

இலங்கையில் ஆயிர கணக்கான பெண்கள் கொன்று குவிக்கபட்ட போது எங்கே போனது இதயம்?

அப்படி பார்த்தால் ஜெயலலிதாவும் ஒரு பெண் தானே. அவரை கைது செய்த போது தி.மு.கவினரின் இதயம் நொறுங்கி விட்டதா என்ன?

திராவிட இயக்கம் தொடங்க பட்ட லட்சியம் என்ன? இப்போது அது எங்கு நோக்கி சென்று கொண்டு இருக்கிறது?

தொண்டர்களோ கொள்கையை விடுதலை செய்து விட்டு தலைவர்களின் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளனர்.

மக்களுக்கோ மோசத்தில் கொஞ்சம் மோசத்தை மாறி மாறி தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம்.

சி.பி.ஐயின் 2G குற்ற பத்திரிக்கை - தேர்தலால் திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
திராவிட இயக்கத்திற்கு மாபெரும் பின்னடைவு.

இந்த பின்னடைவால் நீண்ட கால அளவில் பாதிக்க பட போவது , உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தபட்ட மக்கள் தான்.

--

4 comments:

Rajasurian said...

//இந்த பின்னடைவால் நீண்ட கால அளவில் பாதிக்க பட போவது , உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தபட்ட மக்கள் தான்//

exactly

அஞ்சா சிங்கம் said...

கடமை------------------------------- -காங்கிரசுக்கு வால் பிடிப்பது .......
கண்ணியம் -------------------------காங்கிரஸ் மனம் கோணாமல் நடந்துகொள்வது .........
கட்டுப்பாடு --------------------------காங்கிரஸ் கூட்டணிக்காக இனமே அழிந்தாலும் கட்டுபட்டு கிடப்போம் ..............

அண்ணா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட கழக தொண்டன் (குண்டன்)

dinesh raja said...

why u have not posted any entries for many weeks. i am eagerly waiting for your next post.

சதுக்க பூதம் said...

வாங்க Rajasurian ,அஞ்சா சிங்கம் and dinesh raja.
வேலை பளு அதிகம் இருந்ததால் சில மாதம் எழுதவில்லை. தொடர்ந்து இடைவெளி இல்லாமல் எழுத முயல்கிறேன்