Tuesday, November 18, 2008

அமெரிக்க நிதி நெருக்கடியின் மறுபுறம்

கடந்த சில மாதங்களாக நிகழும் அமெரிக்க நிதி நெருக்கடியின் காரணமாக அங்கு பெரிய நிதி நிறுவனங்கள் வீழ்வதும், பல நிறுவனங்களின் மதிப்பு மிகவும் குறைவதாகவும் உள்ளது. இதன் விளைவாக அங்குள்ள 3 மிகபெரும் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பிற நிறுவனங்களை மிக குறைந்த விளையில் வாங்கிகுவித்து கொண்டு உள்ளது.அரசாங்கமும் நாட்டில் மிகபெரிய நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக பல வகை சலுகைகளை கொடுத்து இந்த செயலை ஊக்குவிக்கிறது.இதன் விளைவாக அமெரிக்கர்களின் 40 சதவித (டெபாசிட்)சேமிப்பு பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப், மற்றும் சேஸ் ஆகிய நிறுவனங்களின் கைகளுக்கு வந்துள்ளது.

அமெரிக்க நிதி நிலமை சரியாக வளர்ச்சி பாதையை அடையும்போது இந்த நிறுவனகளின் வளர்ச்சியும் மிகப் மிகபெரிய வளர்ச்சியாக இருக்கும்.அமெரிக்க பொருளாதாரமும் அதன் மூலம் உலக பொருளாதாரமும் இவர்கள் கட்டுபாட்டுக்கு வந்து விட சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.அந்த அளவிற்கு மிகபெரிய வளர்ச்சி அடைந்த உடன் அமெரிக்க அரசால் எந்த அளவுக்கு இந்நிறுவனங்களை கட்டுபடுத்த முடியும் என்பது கேள்விகுறியே. மேலும் இந்நிறுவனங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ,அவற்றை எந்த தடங்களும் இன்றி செய்ய தொடங்கும்.இந்நிறுவனங்கள் எத்தகைய தவறு செய்து வீழும் நிலை வந்தாலும் அமெரிக்க அரசால் காப்பாற்ற பட்டே ஆக வேண்டிய சூழ்நிலை வரலாம்.Fannie mac மற்றும் Freddie mac போன்ற நிறுவனங்களை போல தைரியமாக பொறுப்பின்றி செயல் பட முயலலாம். ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஒன்று திவாலாகும் நிலை வந்தாலும் அமெரிக்காவின் FDIC(Fedral Deposit Insurance Corporation) ஒட்டு மொத்த நிதியும் காலியாகும் நிலை ஏற்படும். மொத்ததில் உலக பொருளாதாரத்தை கட்டுபடுத்தும் காரணிகளாக வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது.

7 comments:

Anonymous said...

உண்மைதான் இதை நிறுத்த வழிதான் என்ன

சதுக்க பூதம் said...

வீழ்ச்சி உறுதி என்று தெரிந்தும் வேண்டும் என்றே அதை பெரியதாக்கி ஒட்டு மொத்த அமெரிக்க finaancial industry யும் consolidate செய்ய பட்ட சதி என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
நிதி பரிவர்த்தனை செய்வதை கண்காணிக்கும் அமைப்புக்கு வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் ஒன்றாக குறைத்துள்ளனர்.




Excerpt between Rep. Peter Welsh (Democrat, Vermont) and Mr Lynn Turner (Chief Accountant, SEC. 1998 –2001.)

Rep. Peter Welsh: Mr Turner… I think you said that the SEC Office of Risk Management was reduced to a staff, did you say of… ‘one’?

Lynn Turner: Yeah when that gentleman would go home at night he could turn the lights out. In February of this year we had gotten down to just one person at the SEC responsible for identifying the risk at all the institutions

Rep. Peter Welsh: So that included the 62 trillion dollar credit default swap…?

Lynn Turner: That’s correct.

Rep. Peter Welsh: And how did he do..?

Lynn Turner: Well I suppose he got the lights turned out, but he didn’t get the problems taken care of… [ ] …Yeah in all fairness to the SEC… the staff over there that I’ve dealt with over the years have been excellent. But when you only have one person, there’s no way on gods green earth that anyone, Chairman Cox, or anyone else, could even imagine that this person could do the job. When you cut it down to ‘one’, you know what your doing, you know that your basically saying were not gonna do the job.

Rep. Peter Welsh: Yes… was there a systematic depopulating of the regulatory force so that it was impossible actually for regulation to occur if you have one person in that office? …and then I understand that 146 people were cut from the enforcement division of the SEC, is that what you also testified to?

Lynn Turner: Yes… Yeah, I think there has been a systematic gutting, or whatever you want to call it, of the agency and it’s capability through cutting back of staff.


. மேலும் அய்ரோப்பிய நிறுவனங்கள் இது அய்ரோப்பா-அமெரிக்க நிதி நிறுவன பனிப்போர் என்கின்றன
http://www.financialsense.com/editorials/engdahl/2008/1009.html

Anonymous said...

thankyou for the reply sathukapootham.

Anonymous said...

But when i try to check the link it is not working

சதுக்க பூதம் said...
This comment has been removed by the author.
சதுக்க பூதம் said...

Please check this

சதுக்க பூதம் said...

சில காலம் கழித்து நடக்கும் என்று எதிர்பார்த்தது, தற்போதே நடக்க ஆரம்பைத்து விட்டது

http://economictimes.indiatimes.com/News/International_Business/Citigroup_gets_306_bn_rescue_from_US_government/articleshow/3750298.cms
///
Many analysts have said Citigroup might be too big to be allowed to fail, and that any collapse could cause financial havoc around the globe.
//