ஒரு காலத்தில் ஸ்டெப்பி புல்வெளிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மங்கோலியர்களின் உணவு வகைகளில் வேட்டையாட பட்ட விலங்குகளின் மாமிசம் முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலும் வேட்டையாடபட்ட விலங்குகளை தீயில் வாட்டி அல்லது வேகவைத்து அப்படியே உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் மங்கோலியர்கள். மங்கோலியர்களின் உணவு வகைகளை அனைவரும் உண்ணுமாறு மக்கள் ரசனைகேற்ப நூதன முறையில் "Create Your Own Dish" என்ற முறையை மேலை நாடுகளில் அறிமுகபடுத்தி தங்களுக்கென்று ஒரு தனி தன்மையை ஏற்படுத்தி விட்டனர் மங்கோலியர்கள்.
மங்கோலிய உணவகங்களில் நுழைந்தவுடன் நீங்கள் கையில் இரண்டு கிண்ணங்களை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் உங்களுக்கு பிடித்த மாமிச உணவுகளை வேண்டிய அளவு எடுத்து கொள்ள வேண்டும். சிக்கன்,ஆடு,மாடு,பன்றி இறால் என அனைத்து வகை மாமிசங்களும் வைக்க பட்டிருக்கும் .(கிண்ணம் கொள்ளும் அளவு மட்டும்!) உங்களுக்கு பிடித்த மாமிசத்தை வேண்டிய அளவு எடுக்களாம். சைவ உணவு உண்போர் வேண்டிய அளவு நூடுள்ஸ் எடுத்து கொள்ளளாம்.
|
காய் கறிகளும், மாமிசங்களும் |
அடுத்து காய்கறிகளின் பகுதி. இங்கு கேரட்,பிராகோலி,வெங்காயம், பீன்ஸ் முலை, டோபு,காளான், செலரி என பல காய்கறிகள் குவிந்திருக்கும். இன்னொரு கிண்ணத்தில் வேண்டிய காய்கறிகளை நிரப்பி கொண்டு அடுத்த முக்கிய பகுதிக்கு செல்ல வேண்டும்.மாமிச பிரியர்கள் இரண்டு கிண்ணத்திலும் மாமிசத்தை எடுத்து கொள்ளளாம். உங்கள் விருப்பம் போல் அங்கு உள்ள எந்த காய் கறி மற்றும் மாமிசத்தையும் இரண்டு கிண்ணங்களில் நிரப்பி கொள்ளளாம்.
அடுத்து பலவகை Sauceகள் வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருக்கும். இனிப்பு, உரைப்பு,புளிப்பு என அனைத்து வகை களும் இங்கு இருக்கும். உங்களின் விருப்பம் போல் வேண்டிய sauceயை வேண்டிய அளவு எடுத்து உங்கள் உணவின் சுவையை நீங்களே முடிவு செய்யலாம்.
|
எத்தனை வகையான Sauce! Decide பண்றது ரொம்ப கஷ்டம்! |
அங்கு இருக்கும் ஒரு சில sauce வகைகள் இனிப்பு மற்றும் புளிப்பு sauce ,அதி கார sauce ,தேன் சார்ந்த இனிப்பு sauce ,சிப்பி sauce ,கரி sauce ,இஞ்சி சாறு, பூண்டு சாறு,சோயா sauce மற்றும் பல!. அது தவிர பார்பிக்யூ எண்ணெய், நல்லெணெய், கார எண்ணெய் என பல்வேறு எண்ணெய்களும் உள்ளன.
நமது சுவைகேற்ப தேவையான sauce மற்றும் எண்ணெய்களை வேண்டிய அளவு கிண்ணங்களில் கலந்து கொண்டு அடுத்த பகுதிக்கு செல்ல வேண்டும்.
உங்கள் இரண்டு கிண்ணங்களை அடுத்த பகுதியில் இருக்கும் சமைப்பவரிடம் கொடுத்தால் அவர் கிண்ணத்தில் உள்ள உணவு பொருட்களை ஒன்றாக கலந்து சூடான கல்லில் (நம்ப ஊர் கொத்து பரோட் டா கல் போல ) கொட்டி சுமார் 2 - 3 நிமிடங்கள் நம் கண் முன்னே சமைத்துஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு கொடுப்பார்.
|
கண் முன் சமையல் |
|
உணவு ரெடி! |
ஒருவர் நிறைவாக உண்ண கூடிய அளவுக்கு உணவு இருக்கும். அது மட்டுமன்றி ,நூடுள்ஸ்,Fried Rice,Spring rolls, சமைத்து வைக்க பட்ட பல்வேறு மாமிச வகைகளும், சூப் வகைகளும் வேண்டிய அளவு எடுத்து கொள்ளளாம்.
|
இன்ன பிற |
ஒரு வகையான நூடுள்ஸை நமது சுவைகேற்ப தயாரித்து உண்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும். பொதுவாக உணவகங்களில் உண்டபின் உப்பு சரியில்லை, உரைப்பு சரியில்லை, புளிப்பு தூக்கல் என குறை கூறும் வழக்கம் உள்ளவர்கள் இங்கு ஒன்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு நீங்கள் தான் Chef!
பின் குறிப்பு - தீவிர சைவ உணவு முறையை பின் பற்றுவோருக்கு ஏற்ற உணவகம் மங்கோலிய உணவகம் இல்லை. ஏனெனில் உங்கள் கண் முன்னே மாமிச உணவு சமைத்த கல்லிலேயே உங்கள் சைவ உணவையும் சமைப்பார்கள்! மற்ற உணவகங்களின் சமையல் எப்படியோ?. ஏனென்றால் அதை நாம் பார்க்க இயலாது.இங்கு நாம் கண் முன்னே பார்க்கின்றோம்.